புதுடெல்லி, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். 4 நாட்களாக அவை நடவடிக்கைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10:30 மணியளவில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் அமளி அவை இன்று காலை 11 மணிக்கு கூடியதும் மக்களவையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் கூடியது. மாநிலங்களவையில் தொடர் அமளி நிலவியதால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. நாள் முழுவதும் ஒத்திவைப்பு நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளதாகவும், அவை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று ராகுல் காந்திக்கு கிரண் ரிஜிஜு கோரிக்கை விடுத்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/opposition-parties-create-massive-uproar-in-parliament-for-the-fifth-consecutive-day-both-houses-adjourned-one-after-the-other




