மணிலா, தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பு நாடுகளின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ஜெய்சங்கர் - வாங் யி சந்திப்பு இந்நிலையில், இந்த மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். அவர் மாநாட்டில் பங்கேற்க சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி-ஐ சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சீன மந்திரியிடம் எல்லைப்பிரச்சினை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை ஜெய்சங்கர் கூறினார். எல்லைப்பகுதிகளில் அமைதியான சூழல் இருநாட்டு உறவில் அடிப்படை தேவை என கூறிய ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பரஸ்பர மரியாதை, பரஸ்பர நலன் மற்றும் உணர்வுப்பூர்வமான அணுகுமுறை ஆகியவற்றின் இருக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை மந்திரியை வலியுறுத்தினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/border-peace-a-prerequisite-for-normal-ties-between-india-and-china-jaishankar-tells-wang-yi




