ஐபிஎல் 2027 போட்டிகளுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆனால் அடுத்த சீசனுக்கான டிரேட் பேச்சுகள் எப்போதோ சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்ட்யாவின் டிரேட் பற்றி வரும் தகவல்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. அந்த வகையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG), நிக்கோலஸ் பூரனை மும்பை இந்தியன்ஸுக்கு கொடுத்து, அதற்குப் பதிலாக ஹர்திக் பாண்டியாவை அணிக்குள் அழைத்து வர முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொஞ்சம் சுவாரஸ்யமான டீல்! ஒருபக்கம் வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன். மறுபக்கம் இந்திய அணியின் ஆல்-ரவுண்டரும், மும்பை இந்தியன்ஸ் கேப்டனுமான ஹர்திக் பாண்டியா. இருவரையும் வைத்துக் கொண்டு டிரேட் பேச்சு நடப்பதாக தகவல் வெளியானதுமே, சமூக வலைதளங்களில் விவாதமும் வேகமெடுத்திருக்கிறது. ஆனால், இதில் முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. இந்த டிரேட் தொடர்பாக இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மும்பை இந்தியன்ஸ் ஹர்திக்கை டிரேட் செய்ய முடிவு செய்துவிட்டதாகவும் உறுதி செய்யப்படவில்லை. ஹர்திக் பாண்டியா | Hardik Pandya ஹர்திக்கை குறிவைக்கும் அணிகள்! ஹர்திக் LSG க்கு மட்டுமில்ல, எங்களுக்குதா வேணும்னு வரிசையில வந்து நிக்கிறாங்க கேகேஆர் மற்றும் சிஎஸ்கே அணிகள் … அஜிங்க்ய ரஹானே ஓய்வு பெற்றுள்ள நிலையில், KKR அணி தனது தலைமைத்துவ விருப்பங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறது. அந்த இடத்தில் கேப்டன்சி அனுபவம் கொண்ட ஹர்திக் ஒரு முக்கியமான தேர்வாக இருக்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸைப் பொறுத்தவரை, ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகியிருப்பதால் புதிய தலைமைப் பயிற்சியாளர் தொடர்பான முடிவுகளும், அணியின் எதிர்கால கட்டமைப்பு தொடர்பான ஆலோசனைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் ஹர்திக் பாண்டியாவை அணிகுள் கொண்டுவர முயற்சிகளும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. MI - மும்பை இந்தியன்ஸ் மும்பை என்ன செய்யும்? ஹர்திக்கை டிரேட் செய்ய மும்பை இந்தியன்ஸ் சம்மதித்தால்கூட, அவருக்கு இணையான ஆல்-ரவுண்டரை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதனால்தான், இப்போதைக்கு ஹர்திக் மும்பையை விட்டு வெளியேறுவது உறுதி என்று சொல்ல முடியாது. LSG-யின் பூரன் தொடர்பான டிரேட் பேச்சு என்பதும் தற்போது தகவல் மற்றும் யூகத்தின் நிலையில்தான் இருக்கிறது. அதனால், இப்போதைக்கு கிரிக்கெட் ரசிகர்களிடம் இருக்கும் கேள்வி ஒன்றுதான். பூரனை கொடுத்து ஹர்திக்கை வாங்க LSG உண்மையிலேயே முயற்சி செய்கிறதா? அல்லது ஐபிஎல் டிரேட் சந்தை வழக்கம்போல இன்னொரு ‘வதந்தி விருந்து’ வைத்திருக்கிறதா? அதற்கான பதில், அதிகாரபூர்வ டிரேட் மற்றும் அணிகளின் முடிவுகள் வெளியாகும்போதுதான் தெரியும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://sports.vikatan.com/cricket/ipl-trade-talks-at-peak-will-hardik-replaced-by-pooran




