திருப்பதி, திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதோடு பல்வேறு திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் திருப்பதிக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவரும், ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவருமான அண்ணாமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அவருடன் அங்கிருந்த பக்தர்கள் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/we-the-leaders-leader-annamalai-offers-prayers-at-tirupati




