சென்னை, எண்ணூர்- மாமல்லபுரம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருகி வரும் போக்குவரத்து மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்களால் நெரிசல் ஏற்படுகிறது. இதனை குறைப்பதற்காக தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 132.87 கி.மீ. தூரத்துக்கு ரூ.17 ஆயிரத்து 958 கோடி மதிப்பில் சென்னை எல்லை சாலை திட்டப்பணிகள் 5 கட்டங்களாக நடந்து வருகின்றன. முதல்கட்டமாக காட்டுப்பள்ளி முதல் பஞ்செட்டி வரை 25 கிலோ மீட்டர் தூரத்தில் நடந்து வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழிச்சாலை வரையிலான 26.10 கி.மீ. நீளத்திற்கு பணிகளின் ஒரு தொகுப்பு நிறைவடைந்து உள்ளது. நிலம் எடுப்பு தற்போது, திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கண்டிகை பகுதி யில் ஒரு குறிப்பிட்ட நன்செய், புன்செய் நிலங்களை தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் நிலம் எடுப்பு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. ஆட்சேபனை இருந்தால் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள், சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, சிட்கோ கிளை அலுவலக வளாகத்தில் 30 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. 6 வழிச்சாலை எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரையிலான சாலை பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்துக்கு பல்வேறு உதவிகள் தேவைப்படுவதால், அதுதொடர்பாக ஆய்வு செய்யப் பட்டு வருகிறது. தொடர்ந்து, மீதம் உள்ள அனைத்து பணிகளும் ஓராண்டுக்குள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதேபோல், சென்னையில் போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைப்பதற்காக பெரும்பாலான சாலைகள் உலகத்தரத் தில் 6 வழிச் சாலைகளாக மாற்றப்பட உள்ளன என்று தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/land-acquisition-work-for-the-ennore-mamallapuram-road-intensifies




