புதுடெல்லி, ஆசிய விளையாட்டு பளு தூக்குதலில் வெள்ளி வென்ற இந்தியாவின் மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டு ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். வெள்ளிப் பதக்கம் இந்த நிலையில், பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் 198 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டில் முதல் பதக்கம் இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் மீராபாய் சானு தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளார். ஆசிய விளையாட்டில் இதற்கு முன்பு பதக்கம் வெல்லாத மீராபாய் சானு, தற்போது வெள்ளிப் பதக்கம் வென்று தனது பதக்கக் கணக்கை தொடங்கியுள்ளார். உறுதியும், விடாமுயற்சியும் இந்நிலையில் ஆசிய விளையாட்டு பளு தூக்குதலில் வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “ ஒரு சிறப்பான வெள்ளிப் பதக்கம் மீராபாய் சானுவுக்கு. மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற அவருக்கு எனது வாழ்த்துகள். மீராபாய் சானுவின் உறுதியும் விடாமுயற்சியும் தேசத்துக்கு உத்வேகம் அளிக்கிறது. மீராபாய் சானுவால் இந்தியா பெருமை கொள்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/mirabai-chanus-determination-is-an-inspiration-to-the-nation-pm-modi-expresses-pride




