சென்னை, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ. க. அருண்ராஜ் 2026-27 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவு மாணாக்கர்களுக்கான ஒதுக்கீட்டில் சேர்க்கைப் பெற்ற மாணாக்கர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். 7.5% உள்ஒதுக்கீடு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ. க. அருண்ராஜ் இன்று (13.08.2026) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற 2026-27 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவு மாணாக்கர்களுக்கான ஒதுக்கீட்டில் சேர்க்கைப் பெற்ற மாணாக்கர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் சார்பில் 2026-27 ஆம் ஆண்டிற்கான மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய இளநிலை படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தின் வாயிலாக 29.06.2026 முதல் 27.07.2026 மாலை 3 மணி வரை பெறப்பட்டன. அதன்படி மொத்தம் 72,633 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 7.5% அரசு பள்ளி மாணாக்கர்களின் உள்ஒதுக்கீட்டுக்கு 4,860 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. மேலும் சிறப்பு பிரிவுகளான விளையாட்டு பிரிவுக்கு 468 விண்ணப்பங்களும், முன்னாள் படை வீரர் பிரிவிற்கு 524, விண்ணப்பங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவிற்கு 212 விண்ணப்பங்களும் பெறப்பட்டிருந்தன. நேரடி கலந்தாய்வு பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் தேர்வு குழுவினால் பரிசீலிக்கப்பட்டு, மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் 7.5% அரசு பள்ளி மாணாக்கர்களின் உள்ஒதுக்கீட்டிற்கான தர வரிசைக் பட்டியலும் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் 10.08.2026 அன்று வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 7.5% அரசு பள்ளி மாணாக்கர்களின் உள்ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவு ஒதுக்கீடுகளுக்கான நேரடி கலந்தாய்வு இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது. இன்றைய தினம் 7.5% அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான உள்ஒதுக்கீட்டு பிரிவில் உள்ள 614 இடங்களுக்கும், சிறப்பு பிரிவு ஒதுக்கீடுகளான விளையாட்டு பிரிவில் உள்ள 15 இடங்களுக்கும், முன்னாள் படைவீரர் பிரிவிற்கு உள்ள 11 இடங்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் பிரிவிற்கு உள்ள 224 இடங்களுக்கு தகுதியுடைய விண்ணப்பங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 108 மாணாக்கர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது. ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார் இக்கலந்தாய்வில் நேரடியாக கலந்து கொண்டு அரசு மாணாக்கர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவு ஒதுக்கீடுகளில் தங்களுக்கான கல்லூரிகளை தேர்வு செய்த மாணாக்கர்களுக்கு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கி, தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொ) வா.லோகநாயகி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி துணை இயக்குநர்கள் (தேர்வுக்குழு) டாக்டர் கராமத், டாக்டர் பாலநாக நந்தினி, டாக்டர் சாந்தினி ஆகியோர் கலந்த கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/medical-education-75-internal-reservation-for-government-school-students-minister-arunraj-issued-the-orders



