கொழும்பு, இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பயிற்சி ஆட்டம் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதற்கு முன்பு, இரு அணிகளும் தங்களுக்குள் ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடின. டிக்ளேர் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 363 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 357 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியைக் காட்டிலும் 6 ரன்கள் என்ற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது. வெற்றி 207 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 61 ரன்கள், ஷுப்மன் கில் 44 ரன்கள் எடுத்தனர். முகமது சிராஜ் 32 ரன்கள், ரிஷப் பந்த் 28 ரன்கள் எடுத்தனர். இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் வருகிற 15-ம் தேதி தொடங்குகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/warm-up-match-against-sri-lanka-india-wins




