சென்னை, “என் கல்யாணத்தை நான் எப்போது வேண்டுமானாலும் பண்ணிப்பேன். அதில் மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று எனக்கு புரியவில்லை. தனக்கு எப்போது திருமணம் நடந்தாலும், மனதார வாழ்த்தும் சிலர் இருந்தாலே போதும் என அஞ்சலி தெரிவித்துள்ளார். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் அஞ்சலி ‘அங்காடி தெரு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அஞ்சலி. தொடர்ந்து ‘எங்கேயும் எப்போதும்’, ‘மங்காத்தா’, ‘கலகலப்பு’, ‘சேட்டை’, ‘இறைவி’, ‘பலூன்’, ‘காளி’, ‘நாடோடிகள் 2’, ‘நிசப்தம்’ உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அஞ்சலி தொடர்ந்து நடித்து வருகிறார். அடுத்தடுத்த படங்கள் சமீபத்தில் வெளியான ‘மகுடம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. “எப்போது கல்யாணம்?” - அஞ்சலி இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அஞ்சலியிடம் அவரது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தன்னை நேரில் சந்திக்கும் பலரும் முதலில், “எப்போது கல்யாணம்?” என்றுதான் கேட்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “என் கல்யாணத்தை நான் எப்போது வேண்டுமானாலும் பண்ணிப்பேன். அதில் மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று எனக்கு புரியவில்லை. கல்யாணம் என்பது ஒரு நாள் கொண்டாட்டம் கிடையாது. கல்யாணத்துக்கு பின்னால் ஒரு பெண்ணுடைய வாழ்க்கையே மாறுகிறது. பல விஷயங்களை அவள் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி பல சிரமங்களும் பொறுப்புகளும் இருக்கும்போது, எதற்காக திரும்பத் திரும்ப இந்த ஒரே கேள்வியை கேட்கிறீர்கள்?” என்று தெரிவித்துள்ளார். ஆடம்பர திருமணம் தேவையில்லை தனது திருமணம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் அஞ்சலி பேசியுள்ளார். தனக்கு எப்போது திருமணம் நடந்தாலும், மனதார வாழ்த்தும் சிலர் இருந்தாலே போதும். நான் நல்லா இருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிற நாலு பேரோ அல்லது நாற்பது பேரோ இருந்தால் மட்டும் போதும். அவர்கள் மட்டும் என்னுடைய கல்யாணத்துக்கு வந்து மனசார வாழ்த்தினால் போதும். ஆடம்பரமான கூட்டம் எனக்கு தேவையில்லை” என்று அஞ்சலி கூறியுள்ளார். திருமணம் குறித்த அஞ்சலியின் இந்த கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-will-get-married-whenever-i-want-anjalis-bold-statement




