சென்னை, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகார் அடிப்படையில் தொழில் அதிபர் வீரமணி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு துணையாக செயல்பட்ட சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், முன்னாள் உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் கமிஷனர் தேன்மொழி தலைமையில் சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு படையினர் சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், ஜெம் வீரமணி வழக்கில் முதல்-அமைச்சர் விஜய்யை விசாரிக்கக்கோரி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை திமுக பாதுகாத்ததாக கூறிய முதல்-அமைச்சரை விசாரிக்க வேண்டும்; விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நீர்மல்குமாருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இதே வழக்கு தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய், 2 அமைச்சர்களிடம் விசாரிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவிடம் டி.ஆர்.பாலு எம்.பி. மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/gem-veeramani-case-dmk-petitions-for-questioning-chief-minister-vijay




