நெல்லை, மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம். குளிக்க தடை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க 2 ஆவது நாளாகத் தடை விதித்துள்ளது. அருவியில் குளிக்கத்தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியின் இயற்கை அழகை பார்வையிட மட்டும் வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-bathing-banned-at-manimuthar-falls-for-2nd-day




