சட்டப்பேரவையில் தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையிலும், மிசா சட்டம் குறித்து தவறாகவும் பேசியதாக முதல்வர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து, தி.மு.க தலைமை உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சேலம் கோட்டை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தி.மு.க எம்.பி திருச்சி சிவா உரையாற்றினார். அப்போது, ```சட்டப்பேரவையில் திமுக தலைவரை அவதூறாகப் பேசிய முதல்வர் விஜய் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவரது பேச்சு பேரவை விதிகளுக்கு மாறானது. அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். திமுக அரசு மீது தேவையில்லாத கருத்துகளைப் பதிவு செய்வதை முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும்" எனப் பலத்த கோஷங்கள் எழுப்பப்பட்டன. முதல்வர் விஜய் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய மேயர் பிரியா, ``பவுடர் அமைச்சர், டவுசர் அமைச்சர், முறுக்கு அமைச்சர், சட்டமன்றத்தில் பேப்பரில் எழுதிக்கொடுத்ததை ஆதாரங்கள் இன்றி பேரவையில் கத்தும் அமைச்சர்களையும், பேரவையில் எழுத்துக்கூட்டி வாசிக்கும் எம்.எல்.ஏ-க்களையும் வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தி.மு.க-வைப் பார்த்துக் கேள்வி கேட்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது? பேரவைக்கு வரும் முதல்வர், படத்தில் நடித்துவிட்டுப் போவது போல 1-2 மணி நேரம் கையை ஆட்டிப் பேசிவிட்டுச் செல்கிறார். வெறும் கை அசைவுகளால் உண்மையை மறைத்துவிட முடியாது. மிசா சட்டத்தைப் பற்றிப் பேசும் விஜய்க்கு அதைப் பற்றி என்ன தெரியும்? எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை பேரவையை விட்டுப் போகக் கூடாது என்று சொல்லிவிட்டு, அவரே முதுகைக் காட்டிவிட்டு ஓடிவிட்டார். நாங்களாக எந்தப் பிரச்சினைக்கும் போகமாட்டோம்; ஆனால், வந்த பிரச்சினையை விடமாட்டோம். 'என் தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடமாட்டேன்' என்பதைப் போல, எங்கள் தலைவனைத் தொட்டவர் யாராக இருந்தாலும், அவர் மாண்புமிகுவாகவே இருந்தாலும், நாங்கள் சும்மா விடமாட்டோம்" எனக் காட்டமாகப் பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/mayor-priya-has-strongly-attacked-tvk-in-a-protest-meeting



