சென்னை, கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- கர்நாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சரும், கர்நாடகத்தின் Version-ஐயே எதிரொலித்தார். அறிக்கை தமிழ்நாடு அரசு சார்பிலோ, முதல்-அமைச்சர் சார்பிலோ கர்நாடக முதல்-மந்திரி இடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை. த.வெ.க. தலைவர் என்கிற நிலையில் பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் சென்னையில் நாளைய தினம் தென் மாநில முதல்-அமைச்சர்கள் கூட்டம் கூடுகிறது. அந்தக் கூட்டத்தின் போது, கர்நாடக முதல்-அமைச்சரை சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும். இந்த வழக்கு விசாரணையை கர்நாடக காவல்துறை விசாரிப்பதற்கு பதிலாக நம்பகமான நீதி விசாரணை நடத்திட தமிழ்நாடு அரசு கோர வேண்டும். இந்த சம்பவத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் அடிப்படையில் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு தரப்படுவதை உறுதி செய்ய கர்நாடக முதல்-மந்திரி இடம் தமிழ்நாட்டு முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/encounter-involving-three-tamils-in-karnataka-udhayanidhi-stalin-issues-a-lukewarm-statement




