டேராடூன், உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் பிபல்கோட்டி அருகே உள்ள மாயாபூர் பகுதியில் தெஹ்ரி நீர்மின் கழகம் சார்பில்நீர்மின் திட்டத்திற்காகச் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இந் த பணிக்காக சுமார் 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை சுமார் 6:45 மணியளவில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மழை காரணமாக சுரங்கத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீரின் வேகத்தில் தொழிலாளர்கள் அனைவரும் சுரங்கத்தின் நுழைவு வாயிலுக்கு அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநில மற்றும் தேசிய பேரிடர் படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இதுவரை 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமான மேலும் 3 பேரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலத்த மழை சில சிரமங்களை ஏற்படுத்தினாலும், மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/uttarakhand-tunnel-accident-7-dead




