கிட்டத்தட்ட வெளியேறிவிடும் என்ற நிலையில் இருந்து, நம்ப முடியாத ஒரு சரிவிலிருந்து மீண்டு வந்துள்ளது நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா. செவ்வாய்க்கிழமை அட்லாண்டாவில் நடந்த ஃபிஃபா உலகக் கோப்பை 2026 காலிறுதிக்கு முந்தைய சுற்றில், எகிப்துக்கு எதிராக கடைசி 11 நிமிடங்களில் மூன்று கோல்களை அடித்து 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. லியோனல் மெஸ்ஸியின் அபாரமான ஆட்டம், இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு வித்திட்டது. எகிப்துதோல்வியின் விளிம்பில் அர்ஜென்டினா! அட்லாண்டாவின் மெர்சிடிஸ்-பென்ஸ் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டம், அர்ஜென்டினாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுப்பதாகவே அமைந்தது. யாசர் இப்ராஹிம் மற்றும் மொஸ்தபா ஜிகோ ஆகியோர் அடித்த கோல்களால், ஆட்டத்தின் 79-வது நிமிடம் வரை எகிப்து அணி 2-0 என வலுவான முன்னிலையில் இருந்தது. அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை கனவு இத்துடன் முடிவுக்கு வருவதாகவே மைதானத்தில் கூடியிருந்த 68,239 ரசிகர்களில் பெரும்பான்மையினர் நம்பத் தொடங்கினர். மெஸ்ஸி நிகழ்த்திய மேஜிக்! ஆனால், ஆட்டத்தின் கடைசி நிமிடங்கள் அர்ஜென்டினாவின் பக்கம் திரும்பியது. 79-வது நிமிடத்தில், லியோனல் மெஸ்ஸி கொடுத்த ஒரு துல்லியமான கிராஸை கிறிஸ்டியன் ரொமேரோ தலையால் முட்டி கோலாக மாற்றினார். அதுதான் அர்ஜென்டினாவின் மீட்சிக்கான முதல் புள்ளி. அதன் பிறகு வெறும் நான்கு நிமிடங்களில், அதாவது 83-வது நிமிடத்தில், லியோனல் மெஸ்ஸி ஒரு அற்புதமான கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தார். இந்த கோல், மைதானத்தில் இருந்த அர்ஜென்டினா ரசிகர்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்தியது. மெஸ்ஸி ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாம் பாதியின் கூடுதல் நேரத்தின் இரண்டாவது நிமிடத்தில், என்ஸோ பெர்னாண்டஸ் தலையால் முட்டி ஒரு பரபரப்பான கோலை அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார். எகிப்தின் கடுமையான போராட்டத்திற்கு இந்த கோல் முற்றுப்புள்ளி வைத்தது. இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் மெஸ்ஸி ஒரு பெனால்டியைத் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், எகிப்து அடித்த ஒரு கோல் VAR மூலம் நிராகரிக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மெஸ்ஸி உணர்ச்சிவசப்பட்ட பயிற்சியாளர் ஸ்கலோனி! இந்த த்ரில் வெற்றிக்குப் பிறகு, அர்ஜென்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி உணர்ச்சிவசப்பட்டார். "என்னால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை, மன்னிக்கவும். நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன்," என்று கூறிய அவர், "என்ன ஒரு அற்புதமான வீரர்கள் குழு இது. அவ்வளவுதான், நான் செல்ல வேண்டும்," என்று கூறிவிட்டுச் சென்றார். மெஸ்ஸி மீண்டும் முன்னிலை!கோல்டன் பூட் இந்த போட்டியில் அடித்த கோல், இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸியின் 8-வது கோலாகும். இதன் மூலம், பிரான்சின் கிலியன் எம்பாப்பே (7), நார்வேயின் எர்லிங் ஹாலண்ட் (7) ஆகியோரை முந்தி கோல்டன் பூட் பந்தயத்தில் அவர் முன்னிலை பெற்றுள்ளார். 2022 உலகக் கோப்பையிலிருந்து தொடங்கி, இது உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக 9-வது ஆட்டத்தில் அவர் அடித்த கோலாகும். இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முன்னேறியுள்ள அர்ஜென்டினா, சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://sports.vikatan.com/football/argentina-dramatic-comeback-win-vs-egypt-fifa-world-cup-2026




