மண்டாடி: 'மண்டாடி' திரைப்படம் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 10-ஆம் தேதி (நேற்று) வெளியானது. சர்தார் 2: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சாம் சி.எஸ். இசையில் கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சர்தார் 2'. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Mandadi மண்டாடி பிரதம திருஷ்டியா குட்டக்காரன் (Pradhama Drishtya Kuttakkar) - மலையாளம்: ஷாகத் நிலம்பூர் இயக்கத்தில் முஜீப் மஜீத் இசையில் பார்வதி திருவோத்து, மேத்யூ தாமஸ், உன்னிமயா பிரசாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆஷா - மலையாளம்: சபர் சனல் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், ஊர்வசி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஃபால் 2 டெட் பாயிண்ட் (Fall 2 Dead Point) - ஆங்கிலம்: ஸ்பியெரிக் சகோதரர்கள் இயக்கத்தில் ஹேரியட் ஸ்லேட்டர், ஆர்செமா தாமஸ், டாம் பிரிட்னி ஆகியோரின் நடிப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. 2022-இல் வெளியான ஃபால் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஹைவான் - இந்தி: அக்ஷய் குமார், சயீஃப் அலிகான் நடிப்பில் பிரீதம் இசையில் குற்றம் மற்றும் திரில்லர் கலந்த திரைப்படமாக பிரியதர்ஷன் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். 2016-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த 'ஒப்பம்' திரைப்படத்தின் ரீமேக்காக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் செப்டம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Epic Movie எபிக் (Epic) - தெலுங்கு: ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைத்தன்யா நடிப்பில் ஆதித்யா ஹாசன் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மாரேம்மா (Maremma) - தெலுங்கு: இயக்குநர் மணச்சல் நாகராஜ் இயக்கத்தில் மாதவ் பூபதி, தீபா பாலு நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Sardar 2 Review: அதிக பிரமாண்டம், அச்சுறுத்தும் களம்; ஆனாலும் இந்த சர்தார் சறுக்குவது எங்கே? இந்த வாரம் ஓடிடி (OTT) வெளியீடுகள்: திரையரங்கிற்குப் பிந்தைய ஓடிடி படங்கள் ரிலீஸ்: விஸ்வநாத் & சன்ஸ் - Netflix மகுடம் - Prime Video ஒன் மேன் (Tamil) முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/kollywood/new-movie-ott-releases-september-2026-sardar-2-mandaadi




