காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் ஏகனாபுரத்தில், சென்னைக்கான 2-வது விமான நிலையத்தை அமைக்க மத்திய அரசுடன் இணைந்து கடந்த தி.மு.க. அரசு திட்டம் தீட்டியது. இதற்கு அங்கிருந்த விவசாயிகள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய், சட்டசபையில் அறிவித்தார். அப்ப டியானால் அந்த இடம் எதற்காக பயன்படுத்தப்படும்? என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழ்நிலையில்தான் தற்போது பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் சிப்காட் தொழிற்பூங்காவுக்காக நிலங்களை கையகப்படுத்ததமிழக அரசு தயாராகி வருகிறது. தொழில் வளர்ச்சியின் காரணமாக, செமிகண்டக்டர் என்ற மின்னணு பொருளுக்கான தேவை அதிகம் ஏற்பட்டுள்ளது. நில வகைப்பாடு செமிகண்டக்டர் துறையில் பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்காக, மதுரமங்கலத்தில் சிப்காட் மூலம் ரூ.175 கோடி செலவில் செமிகண்டக்டர் மின்னணு உற்பத்தி பூங்காவை அமைக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான நில ஆர்ஜிதம் குறித்த சுற்றறிக்கையை நில நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ளார்.அதில், தொழில் பயன்பாட்டுக்காக 8.3820 ஹெக்டேர் நிலம் தேவைப்படு வதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் அதில், கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் தரிசு நிலங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அவற்றில் வேம்பு மற்றும் தென்னை மரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும், அந்த நிலங்களின் திட்டம் பற்றிய வரைபடங்கள், மாவட்ட வருவாய் சிறப்பு அலுவலர் மற்றும் சிறப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்றும் அலுவலக வேலை நாட்களில் எந்த நேரத்திலும் அவற்றை ஆய்வு செய்யலாம் என்றும் ராஜேஷ் லக்கானி குறிப்பிட்டுள்ளார். 5 ஆயிரம் பேருக்கு வேலை சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பைதொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த சிப்காட் பூங்காவில் செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுவசதிகளும் இடம்பெறும் என்று அவர்தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும், இது தமிழகத்தின் மின்னணு மற்றும் செமிகண்டக்டர் சூழலியலுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மதுரமங்கலத்தில் 166.31.50 ஹெக்டேர் பட்டா நிலம் (410.80ஏக்கர்) எடுப்பு, 4.67.50 ஹெக்டேர் (11.55 ஏக்கர்) அரசு புறம்போக்கு நிலஉரிமை மாற்றம் மற்றும் அங்கு புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு, தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலஎடுப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு 5.2.2024 அன்று உத்தரவிட்டு இருந்தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் நிலத்தை கையகப்படுத்தவும், நில எடுப் புக்கான புதிய பணியிடங்களை ஏற்படுத்துவது தொடர்பாகவும், நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி அந்த ஆணை வெளியிடப்பட்டு இருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-to-acquire-land-in-parandur-decision-made-to-establish-sipcot-industrial-park




