சென்னை, தமிழக சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியதும் 110- விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:- முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத்தொகை ஆண்டொன்றுக்கு தற்போதுள்ள ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும். தஞ்சை, கோவை, நெல்லை, மதுரை மற்றும் விழுப்புரத்தில் மண்டல புற்றுநோய் சிசிக்சை மையங்கள் அமைக்கப்படும். சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ரூ.471 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை தலைமை மையம் அமைக்கப்படும். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ரூ.84 கோடியில் 8 தளங்களுடன் மண்டல புற்று நோய் மையம் அமைக்கப்படும். பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.106.17 கோடி ஒதுக்கப்படும். தரமான மருத்துவச் சேவையை உறுதி செய்யும் வகையில் ரூ.351 கோடி மதிப்பீட்டில் 6,098 கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதில் 660 பி.எஸ்.சி. செவிலியர் இடங்கள், 1,925 செவிலியர் கல்லூரி இடங்கள், 2,778 துணை மருத்துவப் படிப்பு இடங்கள் மற்றும் 735 மருத்துவியல் இடங்கள் அடங்கும். தமிழகத்தில் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும். திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவச் சேவைகள் பல மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும். தமிழகத்தில் அதிகரித்து வரும் புற்றுநோய்களைத் தடுத்து ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தரமான சிகிச்சை வழங்குவதற்காக "முதல்-அமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு " (Chief Minister's Cancer Care Mission) ரூ.673 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/medical-insurance-coverage-increased-to-rs-25-lakh-chief-minister-vijay-announces




