சென்னை, பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று தலைமைச் செயலகத்தில், பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளையும், 3 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகளையும், ஓய்வூதிய நிலுவைத் தொகையினையும், 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். ஓய்வூதிய திட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளும், ஓய்வூதிய நிலுவைத் தொகையாக ரூ.9.36 இலட்சத்திற்கான காசோலைகளும், 3 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகளும், ஓய்வூதிய நிலுவைத் தொகையாக ரூ.4.77 இலட்சத்திற்கான காசோலைகளும், 4 பெண் பயிற்றுநர்கள், 2 ஆண் பயிற்றுநர்கள் என 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வழங்கினார். விளையாட்டுத்துறைக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், ஓய்விற்குப் பின் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்வதற்காகவும், 58 வயதை எட்டிய பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,000 ஓய்வூதியமாகவும் வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 82 நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களும் மற்றும் 13 குடும்ப ஓய்வூதியதாரர்களும் ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகின்றனர். பங்கேற்பு இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், பொது மேலாளர் சுஜாதா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-adhav-arjuna-issues-pension-to-13-former-athletes-appoints-6-coaches




