தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்துக்குள் பதவி விலக வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. இல்லையெனில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் தொடர்பாக ஆங்கில நாளேடு வெளியிட்ட விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து, டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி செய்தியாளர் சந்திப்பு நடத்தியது. அக்கட்சியின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் திப்கே அப்போது கூறியதாவது;- தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்படும்” என்றார். தற்காலிகமாக நிறுத்த வேண்டும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் கூறுகையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும், அவருக்கு எதிராகவும் அவருக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் நபர்களுக்கு எதிராகவும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், வரவிருக்கும் அனைத்து சட்டசபை தேர்தல்களையும் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என 3 கோரிக்கைகளை முன்வைத்தார்.மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை 2025-ம் ஆண்டின் நிலைக்கு திரும்பக் கொண்டு வர வேண்டும் என்றும், இது தொடர்பான ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமையிலான குழுவின் பாதுகாப்பில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தேர்தல் ஆணையத்தில் கருத்து வேறுபாடு தேர்தல் ஆணையத்தில் 10 மாதங்களில் குறைந்தது 14 முறை தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் சில முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஆட்சேபனை தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டது.வாக்காளர்களை சேர்த்தல், நீக்குதல், மீண்டும் சேர்த்தல், வாக்காளர் பதிவு நடைமுறையில் மாற்றங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களில் அவர்கள் ஆட்சேபனைகளை பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டது. எனினும், தேர்தல் ஆணையம் இதனை மறுத்து, ஆலோசனைகளின்போது மாறுபட்ட கருத்துகள் மற்றும் எழுத்துப்பூர்வமான கருத்துகள் தெரிவிப்பது இயல்பான நடைமுறை என்றும், கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் அனைத்தும் மூன்று தேர்தல் ஆணையர்களின் ஒருமித்த ஒப்புதலுடனேயே எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/protest-if-chief-election-commissioner-does-not-resign-within-48-hours-cockroach-janata-warns




