சேலம், த.வெ.க. அரசு தமிழகத்தில் புதிதாக த.வெ.க. அரசு ஆட்சி அமைத்து முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இந்த ஆட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. மேலும் அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அங்கம் வகித்து வருகிறது. இந்த சூழலில் திருமாவளவன், இடைத்தேர்தலில் போட்டியிடு வார் என தகவல்கள் வலம் வந்தன. ஆனால் இதற்கு இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று கூறி அவர் முற்றுப்புள்ளி வைத்தார். சிறப்பு செயற்குழு கூட்டம் இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடந்தது. திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந் தேதி தமிழ்தேசிய எழுச்சி மாநாடு தொடர்பாக நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஓமலூர் மாவட்ட செயலாளர் சாமுராய்குரு தலைமை தாங்கினார். திருமாவளவன் இந்த கூட்டத்தில், திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுவதுடன் வெற்றி பெற்று எளிய மக்களுக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில் தலைவரை துணை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில செயலாளர் காஜாமைதீன், மண்டல துணை செயலாளர்கள் அங்கப்பன், தெய்வானை உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-resolution-passed-at-vck-meeting-to-make-thirumavalavan-deputy-chief-minister




