கோவை, உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து 2-வது ஆண்டாக கோவை முதலிடம் பிடித்து உள்ளது. தமிழக அளவில் அரசு பள்ளிகளில் பிளஸ்-2 முடித்து உயர் கல்வியில் சேரும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையில் கோவை முன்னிலையில் உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 251 பேர் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 307 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 210 பேர் தவிர்த்து மீதம் உள்ள மாணவ-மாணவிகள் உயர்கல்வியில் சேர விண்ணப்பித்து உள்ளனர். தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் 944 பேரில் அடுத்த கட்ட படிப்பிற்காக 288 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 656 பேர் விண்ணப்பிக்காமல் உள்ளனர். மாநில அளவில் முதலிடம் அதன்படி கோவையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளில் 87 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்து உள்ளனர். அத்துடன் மாநில அளவில் தொடர்ந்து 2-வது ஆண்டாக கோவை முதலிடம் பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு 95.45 சதவீத மாணவ-மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் உயர்கல்வியில் சேராத மாணவ-மாணவிகளை கண்டறிந்து அவர்களை உயர்கல்வியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-excels-in-higher-education-admissions-tops-the-state-for-the-second-consecutive-year




