குலசேகரன்பட்டினம், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று முத்தாரம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். தசரா திருவிழா உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வரும் அக்டோபர் 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. திருவிழாவை முன்னிட்டு விரதம் இருக்கும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசுர சம்ஹாரம் அக்டோபர் 20-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. இத்திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் காளி, முருகன், சிவன், பார்வதி, விநாயகர், கருப்பசாமி, விஷ்ணு, குறவன், குறத்தி மற்றும் விலங்குகள் போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து விரதம் மேற்கொள்வர். பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனுக்கு ஏற்ப 60 நாட்கள், 40 நாட்கள், 30 நாட்கள், 21 நாட்கள் மற்றும் 11 நாட்கள் என மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர். விரதக் காலத்தில் பல்வேறு ஊர்களுக்குச் சென்று மக்களிடம் காணிக்கை பெற்று, தசரா நாளன்று கோவில் உண்டியலில் செலுத்தி, வேடத்தைக் கலைத்து விரதத்தை நிறைவு செய்வர். குலசையில் குவிந்த பக்தர்கள் காளி வேடம் அணியும் பக்தர்கள் ஏற்கனவே மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், பிற வேடங்கள் அணியும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து மாலை அணிந்து வருகின்றனர். விரதம் இருக்கும் பக்தர்கள், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று கோவிலுக்கு வந்து கடலில் புனித நீராடி முத்தாரம்மனைத் தரிசித்து, மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். மாலை அணிவதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தவண்ணம் உள்ளனர். இதனால் குலசேகரன்பட்டினம் வீதிகள், சிதம்பரேஸ்வரர் கடற்கரை மற்றும் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/devotional/dasara-viratham-devotees-throng-kulasekarapattinam-mutharamman-temple




