சண்டிகர், பஞ்சாப்பில் லஞ்சம் கேட்டதால் விரக்தியடைந்த இளைஞர் போலீஸ் நிலையத்தில் தற்கொலை செய்ய முயற்சித்தார். பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டம் டொனாலோ பகுதியை சேர்ந்தவர் ஜபன்பிரீத் சிங். இவரது கார் கடந்த 11ம் தேதி தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த தீ விபத்தில் ஜபன்பிரீத் சிங்கின் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதையடுத்து, கார் தீ விபத்து தொடர்பாக காப்பீட்டு நிறுவனத்தில் முறையிட்டார். அப்போது, கார் தீ விபத்து குறித்து போலீசாரிடம் இருந்து சான்றிதழ் வாங்கி வரும்படி காப்பீட்டு நிறுவனம் ஜபன்பிரீத் சிங்கிடம் கூறியுள்ளது. விஷம் குடித்து தற்கொலை முயற்சி இதனை தொடர்ந்து இந்த விபத்து குறித்த சான்றிதழ் பெற ஜபன்பிரீத் சிங் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால், சான்றிதழ் தர போலீசார் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இதனால் விரக்தியடைந்த ஜபன்பிரீத் சிங் போலீஸ் நிலையத்தில் வைத்து இன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், ஜபன்பிரீத் சிங்கை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அவரின் உடல்நிலை தற்போது சுமூகமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/frustrated-by-bribe-demand-youth-attempts-suicide-in-police-station




