பெங்களூரு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மைசூர் அருகே உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து கடந்த 31-ந்தேதி வரை சீராக இருந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் நீர்வரத்து அதிரடியாக உயர்ந்தது. அணை மிக வேகமாக நிரம்பி வருவதால், அதன் பாதுகாப்பை வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், கபினி அணைக்கான நீர்வரத்து 14,599 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 83.05 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து கபினி அணையில் இருந்து காவரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல், 124 அடி கொள்ளளவு கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 107 அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/water-level-rises-in-kabini-dam-cauvery-water-release-increased-to-12000-cusecs




