சென்னை, 143-வது பிறந்த நாளையொட்டி சென்னையில் திரு.வி.க. உருவப்படத்திற்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. திரு.வி.க. உருவபடத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை 'தமிழ்த் தென்றல்' என்று போற்றப்படும் திரு.வி.கலியாணசுந்தரனாரின் 143-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு சென்னை எழும்பூர் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில், திரு.வி.கலியாணசுந்தரனாரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், திரு.வி.கலியாணசுந்தரனாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள், அரசு அலுவலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் கலந்துகொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/143rd-birthday-state-tribute-to-the-portrait-of-shrivk




