சென்னை பாஜகவுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போல் அண்ணாமலை சொல்வது, வடிவேலு காமடியை போல் “அந்த கொண்டய மறைக்காம விட்டியேப்பா.” மாதிரி இருக்கு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். அண்ணாமலை புதிய இயக்கம் தமிழக அரசியல் களத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனியாக புதிய இயக்கம் மற்றும் மாநாடு இன்று நடத்தினார். அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் நகர்வை நடிகர் வடிவேலுவின் காமெடியுடன் கொண்டையை மறைக்காம விட்டுட்டீங்கப்பா' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் கிண்டல் செய்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் புதிய இயக்கங்கள் அல்லது அமைப்புகளைத் தொடங்கலாம்.அதில் எவ்விதத் தவறும் இல்லை. அதற்காக அண்ணாமலைக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், அவர் பேசும்போது தனக்கும் பாஜகவிற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லாதது போலக் காட்டிக்கொள்ள முயல்வதுதான் பெரும் ஆச்சரியமாக உள்ளது. அண்ணாமலை திட்டம் பலிக்காது அண்ணாமலை பேசுவதைப் பார்த்தால் அப்படியே சினிமாப் படத்தில் வரும் நடிகர் வடிவேலுவின் காமெடி போல் தான் இருக்கிறது. ஒருவன் தன் தலையில் இருக்கும் கொண்டையை மறைக்க மறந்துவிட்டு மாட்டிக்கொள்வதைப் போல, கொண்டையை மறைக்காம விட்டுட்டீங்கப்பா' என்ற கதையாகத்தான் அண்ணாமலையின் புதிய இயக்கம் இருக்கிறது. பாஜகவின் முகமாக இருந்துகொண்டே, மக்கள் மத்தியில் தனியாக ஒரு பிம்பத்தை உருவாக்க அண்ணாமலை போடும் திட்டம் பலிக்காது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-conference-you-left-the-party-without-hiding-it-manickam-tagores-sarcasm




