சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பது குறித்த ஆலோசனை உள்ளிட்ட பிற பணிகள் காரணமாக முதல்-அமைச்சர் விஜய் காலையில் சட்டசபைக்கு வருகை தரவில்லை. இந்த நிலையில், மாலையில் சட்டசபைக்கு முதல்-அமைச்சர் விஜய் வருகை தந்தார். அப்போது, முதல்-அமைச்சருக்கென ஒதுக்கப்பட்டு இருக்கும் தனது வழக்கமான இடத்தில் அமராமல், அமைச்சர்களுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டார். குறிப்பாக, அமைச்சர் செங்கோட்டையன் அருகில் அமர்ந்த முதல்-அமைச்சர் விஜய், அவரிடம் சிறிது நேரம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். முதல்-அமைச்சர் விஜய் ஏன் இடம் மாறி அமர்ந்துள்ளார் என அங்கிருந்த பிற அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் உற்று கவனித்துக் கொண்டிருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-seated-in-a-different-spot-in-the-legislative-assembly




