வாஷிங்டன், அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலால் அம்மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இண்டியானா மாகாணத்தின் ஹமில்டன், ரெவன்வுட் உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 6 பேர் பலி இந்நிலையில், அமெரிக்காவில் புயலால் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை, மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இண்டியானா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/heavy-rain-floods-in-us-6-killed




