கன்னியாகுமரி, 2-வது நாளாக ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால், டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து மது விற்பனையை அதிகாரிகள் தொடங்கிய சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் டாஸ்மாக் கடைகளில் ஒரு மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதை தடுக்க புதிதாக பொறுப்பேற்ற த.வெ.க. அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மதுவிற்பனையில் அரசின் குளறுபடியான நடவடிக்கையால் எங்களுக்கு பண இழப்பு ஏற்படுகிறது என்று டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அந்தவகையில் குமரி மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுக்கடைகளை அடைத்து போராட்டத்தில் குதித்தனர். 2-வது நாளாக நீடித்தது முதல் நாளில் டாஸ்மாக் மண்டல மேலாளர் சுகிதா மற்றும் தொழிற்சங்கத்தினருடன் நடந்த 3 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதில் சமாதானம் அடையாத டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று 2-வது நாளாகவும் கடைகளை அடைத்து போராட்டத்தில் குதித்தனர். அவர்களிடம் டாஸ்மாக் மண்டல மேலாளர் கோட்டை குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் நிர்வாகிகளோ, மதுபாட்டிலில் ஒட்டப்படும் ஸ்டிக்கரை பெற்றால் மட்டுமே கடைகளை திறப்போம். மேலும் டாஸ்மாக் கடைகளின் சாவியையும் கொடுக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தனர். மதுவிற்பனையை தொடங்கிய அதிகாரிகள் இதற்கிடையே அதிகாரிகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கை டாஸ்மாக் பணியாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. அதாவது ஒரு சில இடங்களில் அதிகாரிகள் தலைமையில் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மது விற்பனை நடந்தது. ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டு தோவாளை தாசில்தார் சிவகலா தலைமையில் உடைக்கப்பட்டது. இதேபோல் பல இடங்களில் ஒவ்வொரு மதுக்கடையாக திறக்கப்பட்டது. இதனை மாலைக்கு பிறகு அறிந்த மதுப்பிரியர்கள், கடைகளுக்கு மதுவாங்க படையெடுத்ததால் ஒரு சில கடைகளில் கூட்டம் அலைமோதியது. பரபரப்பு இந்த பரபரப்புக்கு இடையே தொழிற்சங்கங்களின் கூட்டு குழுவினர், அதிகாரியுடன் நடத்திய இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதாவது டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 1 மாதத்திற்குள் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த பெரும்பாலான டாஸ்மாக் பணியாளர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். இந்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-employees-protest-in-kumari-breaking-the-locks-of-shops-selling-liquor




