தூத்துக்குடி, தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 4 குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கொலை வழக்கு கடந்த 2013-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரவேல்புரம் பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் காளிமுத்து என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான தூத்துக்குடி, டூவிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ராஜாமணி (வயது 35), நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரமோகன் மகன் சரத்பாபுகுமார்(எ) சரத்(36), தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியை சேர்ந்தவர்களான லட்சுமணன் மகன் சரவணன்(34) மற்றும் தங்கப்பாண்டி மகன் சந்தனகுமார்(34) ஆகிய 4 பேரையும் சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 4 பேருக்கு ஆயுள் தண்டனை இந்த வழக்கின் விசாரணை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் - I (ADJ - I) நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி தாண்டவம் இன்று (11.9.2026) மேற்சொன்ன குற்றவாளிகளான ராஜாமணி, சரத்பாபுகுமார்(எ) சரத், சரவணன் மற்றும் சந்தனகுமார் ஆகிய 4 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-4-accused-in-murder-case-sentenced-to-life-imprisonment-2




