வார்சா, போலந்து நாட்டின் வார்சா நகரில் அமைந்துள்ள கெரெட் ஹவுஸ், அதன் அதீத குறுகிய அமைப்பால் உலக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது. 2 பெரிய கட்டிடங்களுக்கு இடையே உள்ள வெறும் 72 சென்டிமீட்டர் இடைவெளியில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. கட்டிடக்கலை சாதனை போலந்து நாட்டின் பிரபல கட்டிடக் கலைஞர் ஜாகூப் ஸ்செஸ்னி என்பவரால் கடந்த 2012-ம் ஆண்டு இந்த குறுகிய வீடு வடிவமைக்கப்பட்டது. இந்த வீட்டின் அகலம் அதன் மிகக் குறுகிய பகுதியில் 72 செ.மீ ஆகவும், அதிகபட்ச அகலமே வெறும் 122 செ.மீ ஆகவும் மட்டுமே உள்ளது. ”கெரட் ஹவுஸ்” இஸ்ரேலிய எழுத்தாளரான எட்கர் கெரெட் என்பவரின் நினைவாக இதற்கு "கெரெட் ஹவுஸ்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, போருக்குப் பிந்தைய வீட்டுவசதி கூட்டுறவு சங்கத்திற்கும், போருக்கு முந்தைய முன்னாள் யூத குடியிருப்பு கட்டிடத்திற்கும் இடையில், முன்பு பயன்படுத்தப்படாத சுமார் 150 சதுர அடி இடத்தை ஆக்கிரமித்துள்ளது. வீட்டின் உட்புற வசதிகள் இந்திய இன்ப்ளூயன்சரான ரிஷப் வத்வா சமீபத்தில் அந்த வீட்டிற்கு சென்று, அதன் சிறிய உட்புறத்தை சுற்றிப் பார்த்துக் காட்டியுள்ளார். வெளியில் இருந்து பார்க்கும்போது ஒரு சிறிய இடுக்கு போலத் தெரிந்தாலும், இந்த வீடு 2 தளங்களைக் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் ஒரு சிறிய படுக்கை, படிப்பதற்கான மேசை, ஒரு மினி சமையலறை மற்றும் கழிவறை ஆகிய அனைத்தும் மிகக் கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளன. வீட்டின் உள்ளே மூன்று தளங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் நுழைவாயிலும், அடுத்த தளத்தில் குளியலறை, சிறு சமையலறை, அமரும் பகுதி மற்றும் பணிபுரியும் இடமும் அமைந்துள்ளன. ஒரு ஏணி மேல் தளத்திற்கு இட்டுச் செல்கிறது, அங்குதான் படுக்கை அமைந்துள்ளது. மின் இணைப்புகள் இந்த வீட்டிற்கான மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் அருகில் உள்ள பெரிய கட்டிடங்களில் இருந்து பெறப்படுகிறது. இடப்பற்றாக்குறை காரணமாக, இந்த வீட்டின் தளங்களுக்கு இடையே செல்ல படிக்கட்டுகளுக்குப் பதிலாக ஏணிகள் பயன்படுத்தப்படுகின்றன. மின்சாரம் மற்றும் சூரிய ஒளி தாராளமாக உள்ளே வரும் வகையில் இதன் சுவர்கள் ஒளி ஊடுருவக்கூடிய பொருட்களால் செய்யப்பட்டுள்ளன. உலகெங்கிலும் உள்ள கட்டிடக் கலை ஆர்வலர்களை ஈர்க்கும் ஒரு முக்கிய அடையாளமாக இந்த வீடு திகழ்கிறது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/the-worlds-shortest-house-warsaws-keret-house




