இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தேசியப் பாடலாக வந்தே மாதரத்தை அறிவிப்பதோடு, அதை அவமானப்படுத்தும் வகையில் செயல்படுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் மசோதாவை பா.ஜ.க அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. ஆனாலும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க எம்.பி ஆ.ராசா, ``வந்தே மாதரம் பாடலுக்கான சட்ட மசோதாவை நாடாளுமன்றப் பணிகளுக்கான பிசினஸ் திட்ட அறிவிப்பில் குறிப்பிடப்படாமல், மதியம் 3 மணிக்குத் திடீரென்று துணைப் பட்டியலில் கொண்டு வந்தனர். இம்மசோதாவுக்கு நான் ஏற்கெனவே திருத்தம் கொடுத்திருந்தேன். இதில் மிகப்பெரிய அரசியல் சட்ட மோசடி நடைபெற்றுள்ளது. மோடி 1950 ஜனவரி 24 அன்று டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையில், வந்தே மாதரம் பாடல் தேசிய பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது உண்மைதான். ஆனால், பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய முழுப் பாடலும் ஒப்புக்கொள்ளப்பட்டதாக இந்த மசோதாவில் அரசு தவறாகக் கூறியுள்ளது. 'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை; மாநிலங்களவையில் நிறைவேறிய மசோதா! அவர் எழுதிய பாடலில் நான்கு பத்திகள் உள்ளன. முதல் இரண்டு பத்திகள் தேசத்தைப் பற்றியவை. மீதி இரண்டு பத்திகள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவை. இதனால் 1930-களில் எழுந்த பிரச்னையைத் தொடர்ந்து, 1935-37 காலகட்டத்தில் ராஜேந்திர பிரசாத், இரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திர போஸ், பண்டிதர் நேரு, மகாத்மா காந்தி மற்றும் சியாமா பிரசாத் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கூடி ஆலோசித்தனர். கடைசி இரு பத்திகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதால் அவை பாடத் தகுதியற்றவை என முடிவு செய்து, காங்கிரஸ் காரிய கமிட்டியில் நீக்கினர். அந்த முதல் இரண்டு பத்திகளை மட்டுமே ராஜேந்திர பிரசாத் அரசியல் நிர்ணய சபையில் முன்மொழிந்தார். அதுவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆ.ராசா அரசியல் நிர்ணய சபையின் கடைசி நாளில் லட்சுமிகாந்த் மைத்ரா குழுவினரால் பாடப்பட்டதும் அந்த இரண்டு பத்திகள் மட்டுமே. இன்றளவும் மத்திய அரசின் PIB இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தாலும் வந்தே மாதரம் பாடலின் இரண்டு பத்திகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. தேசிய கீதத்துக்கும் மேலாக வந்தே மாதரம்? ஆர்.எஸ்.எஸ், அமித் ஷா, மோடி அரசின் உள்நோக்கம் என்ன? அரசியல் நிர்ணய சபையாலும், அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த இரண்டு பத்திகளைத் தாண்டிச் செல்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அவ்வாறு இருக்க, முழுப் பாடலுக்கும் தேசிய கீதத்திற்கு இணையான மரியாதை தர வேண்டும். தவறினால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனச் சட்டமியற்றுவது மோசடிச் செயலாகும். நாடாளுமன்றத்தில் இந்த வரலாற்று உண்மைகளைச் சுட்டிக்காட்டி நான் திருத்தங்களை முன்மொழிந்தபோது, அரசுத்துறை அதிர்ச்சியடைந்தது. மதியம் 2 மணிக்கு நான் கொடுத்த திருத்தத்திற்குப் பதில் சொல்ல முடியாமல், மைக் இணைப்பைத் துண்டித்து, மதியம் 3:30 மணிக்கு அவசர அவசரமாக இந்த மசோதாவை நிறைவேற்றி முடித்துவிட்டனர். மோடி, அமித் ஷா அரசியல் நிர்ணய சபையின் முடிவிற்கு எதிரான தவறான தகவல்களைச் சட்டமாக்குவது, நாளை நீதிமன்ற விசாரணையின் போது சட்டப்பூர்வமாக நிலைத்து நிற்காது. எனவே, இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு தெளிவற்ற மற்றும் சட்டவிரோதமான நகர்வாகும். தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை உருவாக்கியபோது, மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய பாடலில் "ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து" என்ற வரி இடம்பெற்றிருந்தது. "இனி போன் வந்தால் `ஹலோ' அல்ல `வந்தே மாதரம்' என்றுதான் சொல்ல வேண்டும்!" - அரசு ஊழியர்களுக்கு உத்தரவு அது வரலாற்று ரீதியாக உண்மையாக இருந்தாலும், ஒரு சமூகத்தையோ அல்லது சமஸ்கிருத மொழியையோ புண்படுத்திவிடக் கூடாது என்ற உயரிய பண்பாடும் நாகரிகமும் அப்போதைய முதல்வர் கலைஞருக்கும், தி.மு.க அரசுக்கும் இருந்தது. அதனால்தான் அந்த வரியை நீக்கிவிட்டுத் தமிழ்த் தாய் வாழ்த்தை அரசுப் பாடலாக அறிவித்தார். ஆனால், தற்போதைய ஆட்சியாளர்களிடம் அந்தப் பக்குவமும் பண்பாடும் இல்லை. சாவர்க்கர் இந்திய தேசியத்தை "இந்து தேசியம், இஸ்லாமிய தேசியம்" என மத ரீதியாகப் பிளவுபடுத்தும் சொற்களை முதன்முதலில் பயன்படுத்தியவர் சாவர்க்கர். அதே சிந்தனையில், இந்திய முழுமையையும் இந்து மயமாக்கி, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மாற்றுவதற்காகவே இத்தகைய சட்டங்களை மத்திய அரசு கொண்டுவருகிறது. அரசியல் சாசனத்திற்குப் புறம்பாகவும், சிறுபான்மையினருக்கு எதிராகவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மசோதாவை திமுக சார்பிலும், கட்சி தலைமையின் சார்பிலும் வன்மையாகக் கண்டிக்கிறோம்." என்றார். 'வந்தே மாதரம்' மசோதா: `நாட்டை பிளவுப்படுத்தும் நீங்கள்தான் உண்மையான தேசத்துரோகி' - கனிமொழி கண்டனம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/a-raja-has-criticized-the-bjp-government-terming-the-vande-mataram-bill-a-constitutional-fraud




