முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தாலே விஷயம் தெரிந்திருக்கும்! ``குறுவை சாகுபடிக்கான நிவாரணத்தை ஏற்கனவே வழங்கிவிட்டோம். 'அரசியலே நாங்கதான்' என சொல்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தாலே விஷயம் தெரிந்திருக்கும்." - முதல்வர் விஜய் ``நீங்கள் கொடுத்த சிறப்பு தொகுப்பு நிதி எல்லா அரசிலும் கொடுப்பதுதான். விவசாயிகள் கேட்பது வறட்சி நிவாரண நிதி. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதை தெரிந்துகொள்ள பேப்பர் படித்தால் மட்டும் போதாது. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். விவசாயிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும். கூடி பேசினால்தான் இதெல்லாம் தெரியும்." முதல்வருக்கு உதயநிதி பதில்! `முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தாலே விஷயம் தெரிந்திருக்கும்' - முதல்வர் விஜய் தாக்கு முதல்வர் விஜய், ``காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சில விஷயங்களை கேட்டிருக்கிறார்கள். காவிரி நம்முடைய உயிர் ஆதாரம். அதனால் அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இல்லை. பிரதமருக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். ஜல்சக்தி துறை அமைச்சர் காவிரி பற்றி முழுமையாக குறிப்பிடாத போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை எடுத்துக் காட்டி பிரதமருக்கு நேர்முக கடிதம் எழுதினோம். தமிழகத்தின் உரிமையை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். சட்டப்படி பிரச்னையை அணுக தயாராக இருக்கிறோம். ஆனாலும் ஒரு முறை முயன்று பார்க்கலாம் என்றுதான் கர்நாடகாவுடன் பேச நினைத்தேன். பகை நாடுகளே பேசும்போது பக்கத்து மாநிலங்கள் ஏன் பேசக்கூடாது என்றுதான் அந்த முயற்சியை எடுத்தேன். அதில் அவமானம் நேர்ந்தால் என்ன செய்வது என்று கேட்டார்கள்? அப்படி நேர்ந்தால் தமிழக மக்களுக்காக அதையும் தாங்கிக் கொள்கிறேன் என்றேன்." என்றார். மேலும், ``காவிரி நதி நீர் பங்கீட்டிலும் மேகதாது விவகாரத்திலும் தமிழக உரிமையை விட்டுக் கொடுக்கவே மாட்டோம். அதுதான் எங்களின் நிலைப்பாடு. கர்நாடகாவில் சில அணைகள் கட்டப்பட்டது குறித்து 1969 இல் சபையில் ஒரு விவாதம் நடந்திருக்கிறது. அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தது யார்? ஏன் அணை கட்ட விட்டீர்கள் என கேட்க விரும்பவில்லை. அந்த மலிவு அரசியலை நான் செய்ய விரும்பவில்லை. அப்போதிருந்த எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன் 'காவிரியில் சம்பந்தப்பட்ட ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் கூடிப் பேசி முடிவெடுக்க வேண்டும்' என்றார். ஆனால், இப்போது நிலைமை மாறி விட்டது. குறுவை சாகுபடிக்கான நிவாரணத்தை ஏற்கனவே வழங்கிவிட்டோம். 'அரசியலே நாங்கதான்' என சொல்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தாலே விஷயம் தெரிந்திருக்கும்." என்றார். பயிர் கடன் பேச அனுமதி மறுப்பு. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பயிர் கடன் தள்ளுபடி பற்றி சட்டசபையில் பேச வேணடும் என்றார் அப்போது குறிப்பிட்ட சபாநாயகர் காவிரி விவகாரத்தை பற்றி மட்டும் பேசவும் என பயிர் கடன் தொடர்பான பேச அனுமதி மறுத்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நான் எதையும் தவறாக பேசவில்லை விவசாயிகள் பயிர் கடனுக்காகவும் தான் போராடி வருகிறார்கள் என குறிப்பிட்டார்! ``மேகதாது விவகாரத்தில் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் கடந்த ஒரு மாதத்தில் கர்நாடகா அரசு பல முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறது. அங்கே எல்லா கட்சியினரும் ஒரே எண்ணத்தோடு நிற்கின்றன. ஆனால், இங்கே தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தையே கூட்டவில்லை. இந்த அரசு ஒரு மாடலை பின்பற்றுகிறது. அதாவது, விஷயங்களை முதலில் இவர்களே கசிய விடுவார்கள். எதிர்ப்பு எழுந்தால் அப்படியே பின்வாங்கி விடுவார்கள். கர்நாடகாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தலாம் என முடிவெடுத்தது யார்? பின்னர் அந்தப் பயணம் ஏன் ரத்து செய்யப்பட்டது?" - உதயநிதி `மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை செய்தது என்ன?' உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில், " மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை என்ன செய்தது? மேகதாது அணைகட்ட கர்நாடகா அரசு தீவிரம் காட்டுகிறது. தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தாதது ஏன்? முழு பயிர் கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்தீர்களே அது என்ன ஆனது? மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை செய்தது என்ன? " என கேள்வி எழுப்ப்பினார். தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கூட்டத்தொடர் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பாடகி எஸ். ஜானகி, இயக்குநர், நடிகர் பாக்கியராஜ் உள்ளிட்ட மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. சட்டசபை இரங்கல் தீர்மானத்திற்கு பின்னர் கேள்வி நேரம் சட்டசபையில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் கேள்வி நேரம் முடிந்ததும் 2026 27 ஆண்டுக்கான பொது பட்ஜெட் பட்டியல் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கும். இந்த விவாதங்களில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பேச இருக்கிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோர் பதிலளிப்பார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/tamilnadu-assembly-happenings-on-07-08-2026




