ஜோகன்னஸ்பர்க், ஐசிசி ஆண்களுக்கான 2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் இந்த தொடரின் அதிகாரபூர்வ லோகோ மற்றும் போட்டி நடைபெறும் மைதானங்களின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் 8 மைதானங்கள் 2027 உலகக் கோப்பை போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் 8 மைதானங்களில் நடைபெறவுள்ளன. அவை, வாண்டரர்ஸ் மைதானம் - ஜோகன்னஸ்பர்க் சூப்பர்ஸ்போர்ட் பார்க் - செஞ்சுரியன் நியூலேண்ட்ஸ் - கேப் டவுன் கிங்ஸ்மீட் – டர்பன் செயின்ட் ஜார்ஜ் பார்க் - கெபெர்ஹா மங்காவுங் ஓவல் - புளோம்போன்டைன் போலண்ட் பார்க் - பார்ல் பபெலோ பார்க் - ஈஸ்ட் லண்டன் (குகோம்போ) ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவிலும் போட்டிகள் ஜிம்பாப்வேயில் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (புலவாயோ), பாலே மோசி-ஓவா-துன்யா சர்வதேச கிரிக்கெட் மைதானம் (விக்டோரியா பால்ஸ்) ஆகிய மூன்று மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. நமீபியாவின் தலைநகர் விண்ட்ஹோக்கில் உள்ள நமீபியா கிரிக்கெட் மைதானமும் உலகக் கோப்பை போட்டிகளை நடத்துகிறது. ஐசிசியின் முக்கிய சர்வதேச தொடரை நமீபியா நடத்துவது இதுவே முதல் முறையாகும். 14 அணிகள் பங்கேற்பு 2027 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்க உள்ளன. இருப்பினும், தொடக்கப் போட்டி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் எந்த மைதானங்களில் நடைபெறும் என்பது குறித்து ஐசிசி இன்னும் அறிவிக்கவில்லை. முழுமையான போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/world-cup-festival-in-africa-after-24-years-logo-and-list-of-stadiums-released




