அட்லாண்டா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி புதிய சாதனையை படைத்துள்ளார். அமெரிக்காவில் அட்லாண்டா ஸ்டேடியத்தில், உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இரண்டாவது அரையிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அதிரடியாக விளையாடியது. புதிய சாதனை போட்டியின் தொடக்கத்தில், இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால், 2-வது பாதியின் இறுதியில் ஆட்டத்தின் போக்கு தடம் மாறியது. ஆட்டம் முடிவடைய 5 நிமிடங்கள் இருந்தபோது, அடித்த ஒரு கோலும், அடுத்த 7 நிமிட இடைவெளியில் அடித்த 2-வது கோலும் அர்ஜென்டினா அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. இறுதி போட்டிக்கும் முன்னேறியது. முதல் பாதியில் பின்தங்கிய நிலையில் இருந்த அர்ஜென்டினா, 2-வது பாதியில் அதிரடியை வெளிப்படுத்தியது. அதனுடன் 39 வயதில், அந்த அணியின் கேப்டன் மெஸ்சியும் புதிய சாதனையை படைத்துள்ளார். வேறு எந்த கேப்டனும் படைக்காத சாதனையை அவர் படைத்துள்ளார். 3 முறை 3 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு அணியை கொண்டு சென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதன்படி, 2014 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்று சாதனையை படைத்துள்ளார். இதில், 2022-ம் ஆண்டு கோப்பையையும் வென்று காட்டினார். வேறு அணியின் கேப்டன்கள் 2 முறை அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், நடப்பு தொடரிலும் அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்று 3 முறை இந்த சாதனையை படைத்த கேப்டனாக உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/football/only-captain-messis-new-amazing-record




