திருவனந்தபுரம், கேரள மாநிலம் ஹரிப்பாடு பகுதியை சேர்ந்த பசந்த்-மினி தம்பதியின் மகள் சாகர்யா (வயது 21). இவர் உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். அவருடன் மலப்புரம் மாவட்டம் பெரிந் தல்மண்ணா பகுதியை சேர்ந்த சாதருள் அனாம் (21) என்ற மாணவரும் படித்து வந்தார். இவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தனர். மாணவர் களுக்கும், மாணவிகளுக்கும் ஒரே விடுதியில் தான் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி சாகர்யாவை, சாதருல் அனாம் மடிக்கணினியால் அடித்து கொலை செய்ததாகதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து உறவினர்கள் உஸ்பெகிஸ்தானுக்கு விரைந்தனர். விசாரணையில் சாகர்யாவை மதம்மாற கட்டாயப்படுத்தி சாதருல் அனாம் அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை உஸ்பெகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து பிரேதபரிசோதனைக்கு பிறகு சாகர்யாவின் உடல் நேற்று முன்தினம் விமானம் மூலம் கேரளம் மாநிலம் ஆலப்புழைக்கு கொண்டு வரப்பட்டது. உறவினர்களின் கோரிக்கையை ஏற்று, ஆலப்புழை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவியின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சாகர்யாவின் உடல் அவரது வீட்டுத்தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது அண்ணன் சாவந்த் தீ மூட்டினார். சாதருல்அனாமுக்கு எதிராக ஹரிப்பாடு போலீசில் சாகர்யாவின் உறவினர்கள் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/kerala-medical-student-beaten-to-death-in-uzbekistan-fellow-student-arrested




