மதுரை, மதுரையை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர், செவ்வாய் கிரகத்தில் மின்சாரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உலக விண்வெளி அரங்கில் இந்தியாவின் கொடியை பறக்கவிட்டுள்ளார். சாதனை மாணவர் அகிலேஷ் சந்திரசேகரன் மதுரை மாவட்டம், பசுமலையில் உள்ள சிவகாசி நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர் அகிலேஷ் சந்திரசேகரன். சர்வதேச அளவில் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறமைகளை வெளிக்கொண்டு வர ஒவ்வொரு ஆண்டும் 'கியூப்ஸ் இன் ஸ்பேஸ்' (Cubes in Space) என்ற பிரம்மாண்ட உலகளாவிய போட்டி திட்டத்தை நாசா (NASA) நடத்துகிறது. 80 நாடுகள் பங்கேற்பு இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட உலகெங்கிலும் உள்ள சுமார் 80 நாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தீவிரமாக பங்கேற்று தங்களது அறிவியல் மாதிரிகளை சமர்ப்பித்தனர். இந்த ஒரு லட்சம் கண்டுபிடிப்புகளையும் நாசா விஞ்ஞானிகள் குழு மிக தீவிரமாக ஆய்வு செய்தது. இறுதியில், மிகச்சிறந்த 100 கண்டுபிடிப்புகள் மட்டுமே உலக அளவில் இறுதி பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டன. மின்சாரம் அந்த சர்வதேச பட்டியலில், அகிலேஷ் சந்திரசேகரன் வடிவமைத்த கருவியும் இடம்பிடித்து விண்வெளி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மாற்று தொழில்நுட்பத்தின் அவசியம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள் மற்றும் ரோவர்கள் அங்கு தொடர்ந்து இயங்குவதற்கு மின்சாரம் மிக மிக முக்கியமான தேவையாகும். தடையற்ற மின்சாரம் தற்போது அங்கு சோலார் பேனல்கள் மூலமே மின்சாரம் பெறப்படுகிறது. இதற்கு மாற்றாக, செவ்வாய் கிரக மண்ணில் இயற்கையாகவே மின்சாரம் தயாரிக்கும் 4 சென்டிமீட்டர் அளவுள்ள சிறிய கியூப் பெட்டி. இதற்காக செயற்கையான முறையில் செவ்வாய் கிரக மண் மாதிரியை பூமியிலேயே உருவாக்கி இந்த சோதனையை வெற்றிகரமாக செய்துள்ளார். இதனால் செவ்வாய் கிரகத்தின் எந்தவொரு கடுமையான சூழ்நிலையிலும் ரோவர்களால் தொடர்ந்து இயங்க முடியும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-student-from-tamil-nadu-achieved-a-milestone-by-ranking-among-the-global-top-100-at-nasa



