ஹாலிவுட்டிலிருந்து நிறைய திரைப்படங்கள் தமிழில் நேரடியாக ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன. அதனைத் தாண்டி சில படங்கள் நேரடியாக இல்லாமல், கதையில் சில விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன. தற்போது ஒரு தமிழ் படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். அதற்கான உரிமத்தையும் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்கிறது ரீமேக் செய்யவிருக்கும் ஹாலிவுட் நிறுவனம். மகாராஜா இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மகாராஜா'. வசூலிலும் பெரிய கணக்கைத் தொட்ட இப்படம் பல விருதுகளையும் பெற்றது. தேசிய விருதுகளில்கூட அப்படத்திற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இப்படியான பெரிய அங்கீகாரங்களைப் பெற்ற இந்தத் திரைப்படம் இப்போது ஹாலிவுட்டில் ரீமேக் ஆகவிருக்கிறது. இந்தத் தகவலை இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஹாலிவுட்டில் ரீமேக்காகும் முதல் தமிழ் திரைப்படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. A HISTORIC MILESTONE! becomes the first Tamil film to be made in Hollywood by a major studio ❤️#MakkalSelvan Written and Directed by … — Passion Studios (@PassionStudios_) September 16, 2026 இது தொடர்பாகப் பதிவிட்டிருக்கும் 'மகாராஜா' படத்தின் தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோஸ், " இது வரலாற்று சாதனை. முன்னணி ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் மூலம் உருவாக்கப்படும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை 'மகாராஜா' பெறுகிறது" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் 'இண்டர்ஸ்டெல்லார்' படத்தில் நடித்திருந்த நடிகர் மேத்யூ மெக்கோனஹி (Matthew McConaughey) நடிக்கவிருக்கிறார் எனவும் தகவல்கள் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/kollywood/vijay-sethupathi-maharaja-hollywood-remake-announcement




