புதுடெல்லி, டெல்லியில் சிறுமி ஒருவர் அவருடைய காதலன் உள்பட 4 பேரால் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை புலனாய்வில் போலீசார் கண்டறிந்தனர். பாலியல் பலாத்காரம் டெல்லியின் புறநகர் பகுதியில் உள்ளது, சுவரூப்நகர். இங்கு, ஊரை ஒட்டியுள்ள வயல்வெளியில் சில நாய்கள் ஒரு மனித உடலை கடித்துக் குதறிக் கொண்டு இருந்தன. இதனைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டனர். அந்த பிணம் சிதைக்கப்பட்டு இருந்தது. அதில் ஒரு கை துண்டாகிப் போனது. முகம், அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தது. பிரேதப் பரிசோதனையில் அது ஒரு சிறுமியின் பிணம் என கண்டறியப்பட்டது. உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அது மட்டுமின்றி அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருந்ததும் கண்டறியப்பட்டது. கேமராக்கள் ஆய்வு கொலை செய்யப்பட்ட சிறுமி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. சுற்று பகுதியில் எந்த போலீஸ் நிலையத்திலும் சிறுமி காணவில்லை என்கிற புகார் இல்லை. இதனால் இந்த வழக்கில் போலீசார் முதலில் குழம்பினர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். 50-க்கும் மேற்பட்ட கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, மாலை நேரத்தில் ஒரு மினி வேன், சிறுமி பிணமாக கிடந்த பகுதிக்கு சென்றதை போலீசார் கண்டறிந்தனர். அந்த மினி வேன் ஒரு ஸ்டிக்கர் மூலம் அடையாளம் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த வாகனத்தை கண்டுபிடித்தனர். அதன் டிரைவரிடம் விசாரித்த போது சம்பவம் நடந்த அன்று, சிறுமி மற்றும் 4 இளைஞர்களை, தான் அந்த வயல்வெளிக்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்தார். சிறுமியின் காதலன் இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த 4 பேரையும் பிடித்தனர். அவர்களில் ஒருவர் சிவம் என்கிற சுதாமா (வயது 19). மற்ற 3 பேரும் சிறுவர்கள். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றது அவர்கள்தான் என தெரிய வந்தது. இவர்களில் ஒருவர் சிறுமியின் காதலன் ஆவார். அவர் மூலம் சிறுமி பிற நண்பர்களுடன் சேர்ந்து வயல்வெளிக்கு சென்றதாகவும், அங்கு அவர்கள் மது அருந்தியதாகவும், அதனைத்தொடர்ந்து சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், சிறுமி இதனை வெளியே சொல்லி விடுவேன் என மிரட்டியதால் 4 பேரும் சேர்ந்து அவரை கொலை செய்ததாகவும் தெரிய வந்தது. 4 பேர் கைது இது தொடர்பாக போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த 2 கத்திகள் மற்றும் கொலையின் போது பயன்படுத்திய அவர்களது ஆடைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் போலீசார் துரிதமாக செயல்பட்டு 72 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த செயலை உயர் அதிகாரிகள் பாராட்டினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/delhis-swaroop-nagar-rape-murder-minor-girls-body-partly-eaten-by-dogs-found




