‘இம்மோர்டல்’ திரைப்பட நாயகியான கயாது லோஹரின் படப்பிடிப்புத் தள காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கும் ‘இம்மோர்டல்’ படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். மேலும், டி.எம்.கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏகே பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரே வீட்டில் நடக்கும் ஹாரர் திரில்லர் பாணியிலான கதையாக இதன் காட்சிகள் இருந்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ரொமான்ஸ், திரில்லர், பேன்டஸி கதைக்களத்தில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது. ‘இம்மோர்டல்’ திரைப்படத்தின் ‘ஷி இஸ் மை செல்லக்குட்டி’ என்ற இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டது. இப்பாடலை சாம் சிஎஸ் இசையமைத்து பாடியுள்ளார். படத்தின் ரிலீஸ் அறிவிப்பு முன்னதாக, இப்படம் ஜூலை 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் முதல்-அமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ‘இம்மோர்டல்’ படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ‘யு/ஏ’ சர்டிபிகேட் ஜிவி பிரகாஷின் ‘இம்மோர்டல்’ படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில், ‘இம்மோர்டல்’ படத்தின் கயாது லோஹரின் படப்பிடிப்புத் தள காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் சிந்து என்ற கதாபாத்திரத்தில் கயாடு லோஹர் நடித்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/kayadu-lohars-immortal-film-shooting-footage-out




