தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் - மணப்பாடு அருகே நாட்டுப்படகு கடலில் மூழ்கிய விபத்தில், படகில் இருந்த 6 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். நாட்டுப்படகில் கடலுக்கு சென்ற 6 மீனவர்கள் தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் நவமணி தெருவைச் சேர்ந்த சுகிர்தன் (வயது 36) என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில், நேற்று காலையில் 6 மீனவர்கள் தருவைகுளத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மாலை தருவைகுளத்தில் இருந்து 29 நாட்டிக்கல் மைல் தொலைவில், திருச்செந்தூர் - மணப்பாடு கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். படகு கடலில் மூழ்கியது அப்போது பலத்த காற்று மற்றும் கடலில் திடீரென எழுந்த கடும் அலைச் சீற்றம் காரணமாக படகின் அடிப்பகுதியில் பிளவு ஏற்பட்டுத் தண்ணீர் புகுந்ததால், படகு கடலில் மூழ்கத் தொடங்கியது. படகு மூழ்குவதைக் கண்ட மீனவர்கள், உடனடியாக அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகிற்கு தகவல் அளித்து உதவி கோரினர். 6 மீனவர்கள் மீட்பு விரைந்து வந்த அந்தப் படகின் மீனவர்கள், உயிருக்குப் போராடிய 6 மீனவர்களையும் எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்டுத் தங்கள் படகிற்கு மாற்றினர். தற்போது கடலில் மூழ்கிய நாட்டுப்படகை கடலிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வருவதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-boat-sinks-in-sea-6-fishermen-rescued




