காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ``ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் கூட்டணிக்கான வாய்ப்பு என்ன இருக்கிறது?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இது காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் அதிருப்தி மனநிலையை பிரதிபலிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், எம்.பி பிரவீன் சக்ரவர்த்தி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``புதிய தலைமைச் செயலகம் அமைப்பது என்பது ஒட்டுமொத்த தமிழ்நாடு மாநிலத்திற்கான ஒரு திட்டமாகும். அதைச் சென்னையில் எங்கு அமைத்தாலும் அப்பகுதியில் உள்ள மக்களுக்குச் சில பாதிப்புகள் வருவது இயல்பானதுதான். எனவே, அதன் பாதிப்புகளையும் பலன்களையும் கணக்கிட்டு முடிவெடுக்க வேண்டும். செல்வப்பெருந்தகை இந்த எதிர்ப்பு இயல்பானதாகவோ அல்லது எதிர்க்கட்சிகளால் தூண்டிவிடப்பட்டதாகவோ இருக்கலாம். எதுவாகினும் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் தலைவர்களுடனும் விவாதித்த பிறகு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் இது குறித்து அதிகாரபூர்வக் கருத்தைத் தெரிவிப்பார். கூட்டணிக் குறித்து கருத்து தெரிவிக்க (செல்வப் பெருந்தகை) யார் அவருங்க இப்போ? எதுக்கு தேவையில்லாம வேஸ்ட்டா. முன்பு அவர் என்னவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இப்போது அதெல்லாம் தேவையா? கூட்டணிக்குள்ளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் எந்தவிதக் குழப்பமும் இல்லை. கூட்டணித் தலைவர்கள் மற்றும் முதலமைச்சருடன் நடந்த ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக அமைந்தது. தேர்தலுக்கு முன்பாகக் கூட்டணி எவ்வளவு பலமாக இருந்ததோ, அதே பலத்துடன் தற்போதும் தொடர்கிறது. டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து, தமிழ்நாட்டின் அரசியல் சூழல், காங்கிரஸ் அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் அகில இந்தியப் பொறுப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் 'தமிழக வெற்றிக் கழகம்' போட்டியிடுகிறது. அதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. அதேபோலப் புதுச்சேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். பிரவீன் சக்ரவர்த்தி அவருக்குத் தமிழக வெற்றிக் கழகமும் மற்ற தோழமை கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், அமைச்சர்கள் தலைமையில் இரு குழுக்களை அறிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை (Delimitation) எதிர்ப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் மாநில உரிமைகள் பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தோழமை கட்சிகளும் ஏகமனதாக ஆதரித்துள்ளன. இதில் எவ்விதக் குழப்பமும் இல்லை. தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதன் முறையாகக் கூட்டணியில் அதிகாரப் பங்கீட்டுடன் அமைந்த இந்த ஆட்சியைத் தமிழ்நாட்டு மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்" என்றார். தவெக கூட்டணி: "ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கவில்லை எனில்." - செல்வப்பெருந்தகை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/praveen-chakravarty-has-criticized-the-remarks-made-by-selvaperunthagai-regarding-a-congress-tvk-alliance




