கடந்த திமுக ஆட்சியில், அரசு நடத்திய ஒரு விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு அந்த ஆட்சியை புகழ்ந்து பேசினார் என்று இயக்குநர் மோகன் ஜி விமர்சனம் செய்துள்ளார். பிக் பாஸ் சீசன் 10 தமிழில் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் தற்போது 10வது சீசனை எட்டியுள்ளது. கடந்த 6ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடுவார். நிகழ்ச்சி மற்றும் போட்டியாளர்களிடையே உள்ள நிறை, குறைகளை சுட்டிக்காட்டுவார். கடந்த 12ஆம் தேதி வீட்டிற்குள் தலைவர் பதவி வகித்த ஷாகிதா குறித்து பேசியிருந்தார். ஓடுவது லீடருக்கான தகுதி இல்லை தலைமைத்துவம் குறித்து அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி “தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல். வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சினைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மேல் பழியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை” என பேசியிருந்தார். விர்ச்சுவல் வாரியர்ஸ் விஜய் சேதுபதி மீது குற்றச்சாட்டு தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய வீடியோ பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இவர் முதல்-அமைச்சர் விஜய்யைதான் தாக்கி பேசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனை பார்த்து கடுப்பான விர்ச்சுவல் வாரியர்ஸ், விஜய் சேதுபதி மீது முன்பு எழுந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் லிஸ்ட் போட்டு ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். கரூரில் 41 பேர் இறந்தததைக் குறிப்பிட்டு அக்கட்சியின் தலைவர் முதல்வர் விஜய்யை மறைமுகமாக விஜய் சேதுபதி விமர்சித்துள்ளதாக எக்ஸ் தளத்தில் பலரும் கருத்து கூறி வந்தனர். இதனால் இந்த விவகாரம் மேலும் பெரிதாக மாற அரசியல் தளங்களிலும் சினிமா தளங்களிலும் பேசு பொருளாக மாறியது. விஜய் டிவி விளக்கம் இந்த சர்ச்சை விவகாரங்களுக்கு தற்போது விஜய் டிவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை ஒட்டியே விஜய் சேதுபதி கருத்து தெரிவித்ததாகவும் அதனை நிகழ்ச்சிக்கு வெளியே யாரோடும் ஒப்பிடக்கூடாது எனவும் தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக அதிமுக எம்.பி. இன்பதுரை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்டோர் குரல் கொடுத்திருந்தனர். விஜய் சேதுபதி திமுககாரர் இந்த நிலையில் இயக்குநர் மோகன் ஜி விஜய் சேதுபதிக்கு எதிராக கருத்து கூறியுள்ளார். அவர் கூறுகையில், “ஒரு தனியார் நிகழ்ச்சியில் இது போன்ற கருத்தை விஜய் சேதுபதி சொல்லியிருக்கக்கூடாது. நாங்கள் ஒரு கருத்து சொன்னால் சம்பந்தப்பட்ட நபர்களை நேரடியாக பெயர் சொல்லி சொல்லுவோம். அதனால் விஜய் சேதுபதி நேரடியாக முதல்வர் பெயரை குறிப்பிட்டு சொல்லியிருக்கலாம். ஒரு நிகழ்ச்சியை வைரலாக்குவதற்கு தமிழநாட்டு முதல்-அமைச்சரை பயன்படுத்தக்கூடாது. இது மிகப்பெரிய தப்பு. இதற்கு முன்பு போன ஆட்சியில் அரசு நடத்திய ஒரு விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு அந்த ஆட்சியை புகழ்ந்து பேசினார். அதற்கும் முன்பு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இப்போது விஜய் ஆட்சியில் முதலமைச்சரை கீழ்தரமாக விமர்சித்திருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் அவர் திமுகவை சேர்ந்தவர் என்பது மக்கள் மத்தியில் வெட்டவெளிச்சமாகியிருக்கிறது” என்றுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-vijay-sethupathi-belongs-to-dmk-director-mohan-gs-review




