சென்னை, முதல்-அமைச்சர் விஜய் குறித்த நயினார் பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார். சர்ச்சை பேச்சு முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரீகமாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 'அப்பாவை காணோம்' என்ற முதல்-அமைச்சர் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரீகமாக பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் முதல்-அமைச்சர் விஜய் குறித்த நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு, அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக - பாஜக உறவு இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு அநாகரீகமானது. அவர் நாகரிகமாக பேச வேண்டும். தமிழக அரசியலில் மறைமுக நட்பெல்லாம் வெளிப்படும் நேரம் இது; விரைவில் திமுக - பாஜக இடையேயான உறவு வெளிச்சத்துக்கு வரும். திமுகவினர் போல பாஜகவினரும் அவதூறாக பேசி வருகின்றனர். சத்தம் இன்றி சாதனைகளை நிகழ்த்தும் முதல்-அமைச்சர் விஜய். மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டது மக்கள்தான். தவெகவினர் அல்ல. சத்தமில்லாமல் ஒவ்வொரு நாளும் சாதனைகளை செய்து வருகிறார் முதல்-அமைச்சர் விஜய். ஊழலை ஒழிப்போம் என்ற நம்பிக்கையை மக்களின் மனதில் அறுவடை செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இனிதான் நல்வாழ்வு இதனைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது என்ற ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்துக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், “வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது என பேசுவதா? சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு இனிதான் நல்வாழ்வு வரப்போகிறது” என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendrans-controversial-remarks-the-relationship-between-dmk-and-bjp-will-soon-come-to-light-minister-rajmohan




