`கருப்பு’ திரைப்படம் குறித்து, ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025 விழா மேடையில் ஆர்ஜே.பாலாஜி மனம் திறந்து பேசினார். அப்போது அவர், `` 'கருப்பு' படத்துக்குப் பெரிய வரவேற்பு இருந்தது. பொருளாதாரரீதியாகவும் வெற்றி. ‘கருப்பு’ படம் ரிலீஸ் ஆன பிறகு நான் பங்கேற்கும் முதல் ஸ்டேஜ் இதுதான் என்று நினைக்கிறேன். நாம் ஒரு விஷயத்துக்காக உண்மையாக உழைத்தால், அது நிச்சயம் கிடைக்கும். நாம் நினைக்கும் நேரத்தில் கிடைக்காவிட்டாலும் தள்ளிப்போயாவது அது கிடைக்கும். நாங்கள் ஒரு படம் பண்ணியிருக்கிறோம். அது பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கடவுள் மிகவும் கருணையுடன் இருந்திருக்கிறார். சாய் அபயங்கர் - ஆர்.ஜே.பாலாஜி எனக்கும், சூர்யா சார், சாய் அபியங்கர், தயாரிப்பாளர்கள் என மொத்த டீமுக்கும் நாங்கள் நினைத்ததைவிட அதிகமாகவே கிடைத்திருக்கிறது. சினிமாவில் ஒரு படம் பண்ணிட்டு காணாமல் போகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், இதே இடத்திலிருந்து தொடர்ந்து நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு அடித்தளமாக நான் 'கருப்பு' படத்தைப் பார்க்கிறேன். உண்மையாக உழைத்து மக்களின் புத்திசாலித்தனத்தை நம்பினால் அது நிச்சயம் கைகொடுக்கும் என்பதற்கு இந்தப் படம் எனக்குப் பெரிய நம்பிக்கையைத் தந்துவிட்டது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள மக்கள் காட்டிய அன்புக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இன்று இந்தப் படத்துக்கு 50-வது நாள். ஒருமுறை வெற்றிபெறுவது எளிது. ஆனால் அந்த வெற்றியைத் தக்கவைக்க, தேவையான ஆற்றலை இந்த வரவேற்பு தருகிறது. மிகவும் பணிவாக இந்த வெற்றியை ஏற்றுக்கொள்கிறோம்" என்றார். ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/kollywood/ananda-vikatan-cinema-awards-2025-rj-balaji-speech




