நீலகிரி, நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் கடந்த மாதம் 9-ம் தேதி ஒருவர், 21-ம் தேதி ஒருவர் என இரண்டு பேரை புலி தாக்கிக் கொன்றது. ஒரே பகுதியில் இரண்டு பேரை தாக்கிக் கொன்ற புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து புலியை கூண்டு வைத்தோ அல்லது மயக்க ஊசி செலுத்தியோ பிடிக்க முதன்மை தலைமை வன பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்கரா உத்தரவிட்டார். இதன்படி புலியை கடந்த 15 நாட்களாக வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், ஓவேலி அருகே ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உதயன் என்ற கும்கி யானையின் உதவியோடு புலியை வனத்துறை நெருங்கி உள்ளதாகவும், வன கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசியோடு புலியை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-forest-department-officials-surround-man-eater-tiger-that-killed-two-people




