தூத்துக்குடி, புத்தகத்தை படிக்காமல் செல்போன் பார்த்ததை தாயார் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி மாணவி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருப்புளியங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன். விவசாயி. இவரது மகள் இலக்கிய ஸ்ரீநிதி (22 வயது). இவர் நாசரேத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், கடந்த 5-ந்தேதி வீட்டில் செல்போனை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதை கவனித்த அவரது தாயார் ஜான்சிராணி, புத்தகத்தை படிக்காமல் செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறாயே என்று கண்டித்துள்ளார். விஷம் குடித்தார் இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-scolds-daughter-for-phone-college-student-takes-extreme-step




