மல்லிகைப் பூவின் காலத்தால் அழியாத அழகால் ஈர்க்கப்பட்டு, பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள வைர ஆபரணத் தொகுப்பு 'நறுமுகை', தென்னிந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆபரணப் பாரம்பரியத்தை நவீன 'அன்கட்' (Uncut Diamond) வைரக் கைவினைத்திறன் மூலம் மறுவரையறை செய்கிறது. பாரம்பரியத்தைப் போற்றுவதோடு தனித்துவமிக்க தன்னம்பிக்கையுடன் மிளிரும் நவீனத் தமிழ் பெண்களான 'புதுமைப் பெண்களின்' கம்பீரமான ஆளுமையை ‘நறுமுகை’ வெளிப்படுத்துகிறது. டாடா குழுமத்தின் முன்னணி ஆபரண பிராண்டான தனிஷ்க் (Tanishq), தென்னிந்திய வாடிக்கையாளர்களுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தனது முதல் 'அன்கட் டைமண்ட் ஓபன் பொல்கி' (Uncut Diamond Open Polki) ஆபரணத் தொகுப்பான 'நறுமுகை'யை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆடி மாதக் கொண்டாட்டங்களைச் சிறப்பிக்கும் வகையில் ‘நறுமுகை’ ஆபரணத் தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பண்பாட்டின் மிக முக்கியமான அடையாளமான மல்லிகைப் பூவின் அழகை அடிப்படையாகக் கொண்டு, பாரம்பரியம், நேர்த்தியான கைவினைத்திறன் மற்றும் நவீன வடிவமைப்பை ஒருங்கிணைத்து இந்த ஆபரணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் ஆடி மாதம் என்பது மங்கலம், செல்வம் மற்றும் புதிய தொடக்கங்களின் கொண்டாட்டமாக விளங்குகிறது. இந்த ஆண்டு, தென்னிந்தியப் பெண்களின் அன்றாட வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் மகிழ்ச்சிகரமான நினைவுகளால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்புகள் மூலம் தனிஷ்க் இத்திருவிழாவைக் கொண்டாடுகிறது. பல தலைமுறைகளாகக் கம்பீரம், பெண்மை மற்றும் அன்பின் அடையாளமாகத் திகழும் மல்லிகைப் பூ, கூந்தலிலும் வீடுகளிலும் அலங்காரமாக அமைந்து பல அரிய நினைவுகளையும் மகிழ்ச்சியையும் நினைவூட்டி வருகிறது. மேலும், இக்காலத்திலும் தங்களுடைய பாரம்பரியத்தைப் பெருமையுடன் ஏற்றுக்கொண்டு, சொந்த அடையாளத்தையும் நேர்த்தியாக வெளிப்படுத்தும் 'புதுமைப் பெண்'களின் குணத்தை தனிஷ்க், கொண்டாடுகிறது. தன்னம்பிக்கை, அழகு மற்றும் ஆளுமையையும் கொண்ட நவீனத் தமிழ் பெண், தன்னை உருவாக்கிய பாரம்பரியத்தைப் பின்பற்றி வருவதோடு, தன்னுடைய தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறாள். இந்த நவீனத் தமிழ் பெண்களுக்காகவே 18 கேரட் தங்கத்தில் உயர்தர அன்கட் வைரங்களால் செதுக்கப்பட்டுள்ள 'நறுமுகை' ஆபரணங்கள், தென்னிந்தியப் பண்பாட்டின் அடையாளமான மல்லிகைப் பூவின் அழகியலை நவீன வடிவில் வெளிப்படுத்துகிறது. பாரம்பரியம் மற்றும் நவீன அழகியல் இரண்டையும் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ’நறுமுகை’ ஆபரணத் தொகுப்பு, தென்னிந்திய அடையாளத்திற்குப் புத்துணர்ச்சியூட்டும் புதிய வடிவத்தை வழங்குகிறது. மென்மையாக விரியும் சிறுமொட்டுகள் முதல் மலரும் பூக்கள் வரை, மாலைகளாகத் தொடுக்கப்பட்டு அணியப்படும் மல்லிகையின் பல்வேறு வடிவங்களால் ஈர்க்கப்பட்டு, நுணுக்கமான கைவினைத்திறன் மூலம் ’நறுமுகை’ ஆபரணத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் இயல்பான அழகை நேர்த்தியான கைவினைத்திறன் மூலம் ஒவ்வொரு நகையும் வெளிப்படுத்துகின்றன. அட்டிகை, மாங்காய் மாலை, ஹாரம் போன்ற தென்னிந்தியாவின் பாரம்பரிய ஆபரண வடிவங்கள், நவீன வடிவமைப்புகளுக்கு ஏற்ப மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இது ஆபரணங்களின் பண்பாட்டு சாரத்தைப் பாதுகாப்பதோடு, அன்கட் வைரங்களின் மென்மையான இயற்கை பொலிவையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் அன்கட் வைர ஆபரணப் பாரம்பரியத்தின் நவீன வடிவமான 'ஓபன் பொல்கி' (Open Polki) நுட்பமே இதன் முதன்மை சிறப்பம்சமாகும். சாதாரண வைரங்களைப் போல் இல்லாமல், அன்கட் வைரங்கள் தங்களது இயற்கையான வடிவத்தையும் நுட்பமான ஜொலி ஜொலிப்பையும் தக்கவைத்துக்கொள்கின்றன. ஒவ்வொரு கல்லும் தனித்துவமானது என்பதால், ஒவ்வொரு ஆபரணமும் பிரத்தியேகமானதாக அமைகிறது. உயர்தரக் கைவினைத்திறன் மற்றும் ரத்தினக் கற்கள், முத்துக்களின் சேர்க்கை மூலம், தனிஷ்க் புதிய ‘நறுமுகை’ நகைத்தொகுப்பிற்கு ஒரு நேர்த்தியான அழகியலை வழங்கியுள்ளது. ’நறுமுகை’ ஆபரணத் தொகுப்பின் விலை ₹40,000 முதல் தொடங்குகிறது. 'நறுமுகை' ஆபரணத் தொகுப்பில் நெக்லஸ்கள், சோக்கர்கள், ஹாரங்கள், கம்மல்கள், வளையல்கள், பிரேஸ்லெட்கள், மோதிரங்கள், டாலர்கள் மற்றும் முகூர்த்த ஆபரணங்கள் எனப் ஏராளமான வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இது பண்டிகைக் காலங்களுக்கும், அன்றாட விசேஷ தருணங்களுக்கும் ஏற்ற தேர்வாகும். தென்னிந்திய வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் பண்பாட்டு அம்சங்களுடன் நவீன வடிவமைப்பு கொண்ட ஆபரணங்களை உருவாக்கி, ஆபரண வடிவமைப்பில் தனிஷ்க் தனது தலைமைத்துவத்தைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. இந்த அறிமுக நிகழ்வில் பேசிய டைட்டன் நிறுவனத்தின் ஆபரணப் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி திரு. அருண் நாராயண் (Arun Narayan, Chief Executive Officer, Jewellery Division, Titan Company Limited), "தனிஷ்க்கின் வெற்றிகரமான பயணத்தில் தமிழ்நாட்டிற்கு எப்போதும் ஒரு சிறப்புமிக்க இடம் உண்டு. இப்பிராந்தியத்தின் செழுமையான பண்பாட்டுப் பாரம்பரியமும், வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் நவீன விருப்பங்களும் எங்களது ஆபரண வடிவமைப்புத் தத்துவத்திற்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன. தென்னிந்திய சந்தைக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள தனிஷ்க்கின் முதல் அன்கட் வைர ஆபரணத் தொகுப்பான 'நறுமுகை'யை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மல்லிகைப் பூவின் காலத்தால் அழியாத அழகால் ஈர்க்கப்பட்டு, தென்னிந்தியாவின் பாரம்பரிய ஆபரண வடிவங்களை நவீன வடிவமைப்புகளுடன் இதில் ஒருங்கிணைத்துள்ளோம். உயர்தரக் கற்கள், நேர்த்தியான கைவினைத்திறன் மற்றும் அர்த்தமுள்ள வடிவமைப்புகள் மூலம் அன்கட் வைர ஆபரணப் பிரிவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் எங்களது அர்ப்பணிப்பை ’நறுமுகை’ பிரதிபலிக்கிறது. பண்பாட்டு அம்சங்களுடன் தொடர்ந்து புதுமைகளைப் படைப்பதன் மூலம், ஒவ்வொரு தலைமுறைக்கும் ஏற்ற, தனித்துவமான மற்றும் காலத்தால் அழியாத ஆபரணங்களை வழங்குவதே எங்களின் நோக்கமாகும்," என்றார். தனிஷ்க்குடன் இணைந்து ஆடி மாதத்தின் மகிழ்ச்சியைக் கொண்டாடுங்கள்! பண்பாட்டு நினைவுகளைக் காலத்தால் அழியாத நவீன ஆபரணங்களாக மாற்றியிருக்கும் 'நறுமுகை' ஆபரணத் தொகுப்பை நேரடியாக சென்று கண்டுகளியுங்கள். 18 கேரட் தங்கத்தில் உயர்தர அன்கட் வைரங்களால் செதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஆபரணமும் தென்னிந்தியப் பாரம்பரியத்தின் அழகை வெளிப்படுத்துகிறது. தனிஷ்க்கின் ஆடி பண்டிகை சிறப்புச் சலுகையாக, சாதாரண தங்க ஆபரணங்களுக்குக் கிராமிற்கு ₹601 வரை சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது பழைய தங்க ஆபரணங்களைக் கொடுத்து (9 கேரட் வரையிலான குறைந்த தரமாக இருந்தாலும்) வெளிப்படையான வழிமுறைகள் மூலம் 100% முழு மதிப்பில் மாற்றிக் கொள்ளும் 'கோல்ட் எக்ஸ்சேஞ்ச்' திட்டமும் நடைமுறையில் உள்ளது. 36 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற இத்திட்டம் மூலம், பாரம்பரிய ஆபரணங்களைப் புதுப்பித்து புதிய பண்டிகை ஆபரணங்களை முழு நம்பிக்கையுடன் வாங்கலாம். இந்த ஆடி மாதத்தில் உங்களுக்கு அருகிலுள்ள தனிஷ்க் விற்பனை நிலையத்திற்கு வருகை தந்து, 'நறுமுகை' நகைத்தொகுப்புகளுடன் சிறப்புச் சலுகைகளையும் கொண்டாடுங்கள் தனிஷ்க் (Tanishq) பற்றி: டாடா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க், 20 ஆண்டுகளுக்கும் மேலாக நுணுக்கமான கைவினைத்திறன், பிரத்தியேக வடிவமைப்புகள் மற்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தரத்திற்குப் பெயர் பெற்ற இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் ஆபரண பிராண்டாகும். இந்தியப் பெண்களின் பாரம்பரிய மற்றும் நவீன விருப்பங்களைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப ஆபரணங்களை வழங்கும் நாட்டின் முன்னணி பிராண்டாக இது உருவெடுத்துள்ளது. தங்கத்தின் தூய்மையை உறுதி செய்வதில் தங்களுக்குள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், அனைத்து தனிஷ்க் விற்பனை நிலையங்களிலும் 'காரட்மீட்டர்' (Karatmeter) கருவிகள் வைக்கப்பட்டுள்ளன; இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் தங்கத்தின் தூய்மையை மிக எளிதாகவும் துல்லியமாகவும் சரிபார்த்துக் கொள்ள முடியும். தனிஷ்க் சில்லறை விற்பனை நெட்வொர்க் தற்போது 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் 500-க்கும் அதிகமான பிரத்தியேக விற்பனை நிலையங்களுடன் வலுவான விற்பனை செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/business/a-mallipoo-inspired-uncut-diamond-collection-for-the-modern-tamil-woman-by-tanishq




