நீலகிரி, நீலகிரி மாவட்டம் கூடலூர் புத்தூர் வயலில் இரவில் காட்டு யானைகள் பாக்கு மரங்களை யும், நெற்பயிர்களையும் சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காட்டு யானைகள் அட்டகாசம் கூடலூர் புத்தூர்வயல்,மாக்க மூலா, கோடமூலா உள்பட பல பகுதிகளில் 7 காட்டு யானைகள் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக முகாமிட்டு வருகிறது. அங்குள்ள வீடுகளையும் இரவில் முற்றுகையிட்டு வருகிறது. இதேபோல் பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களையும் நாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு புத்தூர்வயல் மகாவிஷ்ணு கோவில் அருகே 3 காட்டு யானைகள் விவசாய நிலத்துக்குள் நுழைந்தது. பின்னர் முகமது என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களை முறித்து சேதப்படுத்தியது. இதில் குலைக ளுடன் கூடிய வாழைகள் சரிந்து விழுந்தது. சில வாரங்களில் அறுவடை செய்ய வேண்டிய குலைகள் சேதமடைந்து இருப்பதை கண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை அடைந்தனர். நெல் நாற்றுகளை மிதித்து இதேபோல் சைலஜா என்பவரது வயலுக்குள் புகுந்த காட்டு யானைகள் நடவு செய்திருந்த நெல் நாற்றுகளை மிதித்து நாசம் செய்தது. இதனால் நஷ்டம் அடைந்திருப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் புலம்பினர். எனவே சேதமடைந்த பயிர்களுக்கு ஏற்ற இழப்பீடு தொகையை வழங்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- பாக்கு, நெல் நாற்றுகள் மட்டுமின்றி வாழைகளை அடிக்கடி காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் வனவிலங்குகள் அட்டகா சத்தால் விவசாயத்தை கைவிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம். தற்போது விவசாய பயிர் மட்டுமின்றி நீர்ப்பாசன குழாய்கள், மோட்டாரை யும் காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளன. எனவே சேதத்துக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-wild-elephants-damage-areca-nut-and-paddy-crops-farmers-concerned




